சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவதிப்படும் மாற்றுத்திறனாளிகள்.. கவனிப்பாரா கலெக்டர்?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவதிப்படும் மாற்றுத்திறனாளிகள்.. கவனிப்பாரா கலெக்டர்? - வீடியோ

    சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக உட்பகுதியில் இயங்கிவரும் மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் இடத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தியதால் மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது.

    Disabilities persons facing difficulties in Salem district collectors office

    அந்த நுழைவாயிலில் மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் பகுதி அந்த அலுவலகத்தின் முன்பாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி உள்ளனர். அந்த பகுதி மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசு அலுவலகங்கள் மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் இடத்தை தங்களது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளதால் மாற்றுத்திறனாளிகள் மிகவும் துன்பத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக இங்கு இரு சக்கர வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் மாற்றுத்திறனாளிகள் சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

    அந்த அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பாகவே வாகனத்தை நிறுத்தி இருப்பது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஸ்ரீநாத் அவர்களுக்கு தெரியும் . ஆனால் அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாற்றுத்திறனாளிகள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர் .

    Disabilities persons facing difficulties in Salem district collectors office

    மேலும் அரசு அலுவலர்களுக்கு என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு பகுதியில் வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு உள்ளது அங்கு கண்காணிப்பு கேமராவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தின் முன்பாக இந்த காத்திருக்கும் பகுதியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.

    Disabilities persons facing difficulties in Salem district collectors office

    இதை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்து உள்ளனர். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா அல்லது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+