"விடியல் கிடைக்கும்" அழகாக பேசி ஏமாற்றிவிட்டார்கள்.. ஊழல் செய்வதே திமுகவின் சாதனை.. எடப்பாடி அட்டாக்
சேலம்: ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, வந்த பிறகு ஒரு பேச்சு என திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலத்தில் நடந்த அதிமுக கட்சி பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே கிடையாது. திமுகவின் சாதனையே ஊழல் செய்ததுதான் சாதனை. திமுக 2ஆண்டு கால ஆட்சியில் என்ன திட்டம் கொண்டு வந்தது. நாட்டு மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? எதுவுமே கிடையாது.

முதல்வர் குடும்பம் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் குடும்ப ஆட்சி சர்வாதிகார ஆட்சியாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று பல முதல்வர்கள் ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். அதிகார மையங்க்ள் அதிகரித்து விட்டது. அதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்து விட்டார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் சுமார் 520 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். 10 சதவீத அறிவிப்புகளை தான் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
கவர்ச்சிகரமாக அறிக்கை வெளியிடுவார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து அறிவிப்புகளையும் காற்றில் பறக்க விட்டு விடுவார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு..வந்த பிறகு ஒரு பேச்சு... இரட்டை வேடம் போடுகிற கட்சி எதுவென்றால் அது திமுகதான். சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக அரசு ஊழல் அரசாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. ஊழல் செய்ததாக ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவர் தொடர்ந்து அமைச்சராக இருக்கிறார்.
அவருக்கு முதல்வர் வக்காலத்து வாங்கி கொண்டு இருக்கிறார். மிக கேவலமாக இருக்கிறது. நாடே எள்ளி நகையாடுகிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் இருப்பவரை எப்படி மாண்பு மிகு அமைச்சர் என்று சொல்ல முடியும். சிறைவாசியாக இருப்பவர் எபப்டி அமைச்சராக தொடர முடியும் என்றுதான் மக்கள் கேட்கிறார்கள். இனியாவது செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து முதல்வர் விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் தகுந்த பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
-
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி












Click it and Unblock the Notifications