எடப்பாடி பழனிசாமிக்கு செக்.. ராஜ்ய சபா தேர்தலில் செய்த சம்பவம்.. சேலத்திலேயே ஓங்கும் திமுகவின் கை!
சேலம்: திமுக தரப்பில் மாநிலங்களவை தேர்தலில் எஸ்.ஆர்.சிவலிங்கத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக செக் வைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே லோக்சபா தேர்தலில் செல்வ கணபதி வென்றிருந்த நிலையில், அமைச்சரவையில் ராஜேந்திரனையும் கொண்டு வந்தது. இதனால் சேலம் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு கூடுதல் சவால் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்ட நிலையில், அடுத்தக் கட்ட பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில் மாநிலங்களவை தேர்தலில் திமுக மிக முக்கியமான ஒரு சம்பவத்தை செய்திருக்கிறது.

சேலத்தில் திமுக
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.சிவலிங்கத்திற்கு ராஜ்ய சபா தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 8 தொகுதிகளை அதிமுகவும், 2 தொகுதிகளை பாமகவும், ஒரேயொரு தொகுதியில் மட்டும் திமுகவும் வென்றது. தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தரப்பில் போட்டியிட்ட செல்வ கணபதி போட்டியிட்டு வென்றார்.
தீவிரமான திமுக தலைமை
ஆனால் கடந்த தேர்தலை காட்டிலும் திமுகவின் வாக்கு சதவிகிதம் குறைந்து போனது. இதனால் இம்முறை சேலம் மாவட்டத்தில் சில தொகுதிகளில் கூடுதலாக வெல்ல வேண்டும் என்பதில் திமுக தலைமை தீவிரமாக இருக்கிறது. அதற்கேற்ப திமுக தலைமை காய்களை நகர்த்தி வருகிறது. ஏற்கனவே சேலம் வடக்கு மாவட்டமான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனை அமைச்சரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சேர்த்தார்.
3 பொறுப்புகள்
இதனால் சேலம் மாவட்ட திமுகவினர் உற்சாகம் அடைந்தனர். வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளராக இருந்து தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கி அரசியல் செய்தவர் ராஜேந்திரன். இதனால் சேலம் மாவட்டத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எஸ்.ஆர்.சிவலிங்கத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு செக்
இதனால் முக்கிய நிர்வாகிகள் ஒருங்கிணைத்து சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்திற்கு திமுக கூடுதல் முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருவதால், அவருக்கு செக் வைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications