சேலத்தில் விடிந்தால் வளைகாப்பு.. காதல் கணவருடன் சென்ற கர்ப்பிணி காவ்யா.. எமனாக மாறிய துப்பட்டா
சேலம்: சேலத்தில் விடிந்தால் வளைகாப்பு நிகழ்ச்சி என்கிற நிலையில், காதல் கணவருடன் சென்ற போது, மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி கர்ப்பிணி உயிரிழந்தார். தன்னை முதன் முதலாக மாமியார் வீட்டிற்கு வந்த பார்க்கும், பெற்றோரை தானே நேரில் சென்று அழைத்து வர வேண்டும் என்று கர்ப்பிணி விரும்பியுள்ளார். அதன்படி காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்ற விரும்பிய கணவன் தற்போது கலங்கி போய் நிற்கிறார்.
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த 21 வயதாகும் தனுஷ் என்பவர், அஸ்தம்பட்டியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவர் இதற்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அவரது உறவினர் வைத்துள்ள பேக்கரியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த 28 வயதாகும் காவியா என்பவரை காதலித்து கல்யாணம் செய்தார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றோர்கள் இவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொண்டனர். தற்போது காவியா 7 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு தனுஷ் தனது மனைவியுடன் சேலத்தில் தங்கி பணியாற்றி வந்தார். திருமணத்திற்கு பிறகு காவியாவின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்துள்ளது. காவ்யா தனது பெற்றோருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். திருமணம் முடிந்த பின்னர் ஒருமுறை கூட காவ்யாவின் பெற்றோர் சேலத்தில் உள்ள மகளின் வீட்டிற்கு வரவில்லை.. இந்நிலையில் தனது வளைகாப்பிற்கு வர வேண்டும் என்று காவ்யா கூறியிருக்கிறார். அதன்படி வளைகாப்பிற்கு வருவதாக பெற்றோரும் காவ்யாவிற்கு உறுதி அளித்துள்ளனர். இந்நிலையில் சேலத்தில் நேற்று காலையில் காவியாவுக்கு வளைகாப்பு நடத்த தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதனிடையே காவியாவின் அழைப்பை ஏற்று பழனியில் இருந்து காவியாவின் தாயும், தந்தையும் நேற்று முன்தினம் இரவு சேலத்திற்கு புறப்பட்டு வந்தனர். அவர்கள் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கினார்கள். பின்னர் மகளுக்கு போன் செய்து சேலத்திற்கு வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்கள். காவியாவின் திருமணம் முடிந்த பிறகு அவரது பெற்றோர் முதல் முறையாக சேலம் வந்துள்ளார்கள் என்பதால், தானே பெற்றோரை நேரில் சென்று அழைத்து வரவேண்டும் என்ற விருப்பத்தை கணவரிடம் காவியா கூறியிருக்கிறார்.
இரவு நேரமாக இருந்தாலும் காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்ற காவியாவை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தனுஷ் புறப்பட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் புதிய பஸ் நிலையம் நோக்கி அவர்கள் சென்றார். அப்போது, சாரதா கல்லூரி சாலையில் உள்ள மேம்பாலத்தில் இறங்கும் இடத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து காவியா திடீரென கீழே தவறி விழுந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். காவியாவின் துப்பட்டா, அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் சிக்கியதால் கீழே விழுந்துள்ளார். இதில் காவியாவின் பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த காவியா நேற்று காலை உயிரிழந்தார். இதனால் மருத்துவமனையில் திரண்டு இருந்த காவியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், காவியாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். மகளின் வளைகாப்புக்கு வந்த இடத்தில் அவரது இறுதி சடங்கில் பங்கேற்கும் நிலைமை ஆகிவிட்டதை நினைத்து அவர்கள் கதறி அழுதது காண்போரையும் கலங்க வைத்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications