பாதுகாப்பாக இருங்கள்.. காவிரியில் பெரும் வெள்ளம்.. கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!
காவிரியில் வெள்ளம் அதிகரித்து இருப்பதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Recommended Video

சேலம்: காவிரியில் வெள்ளம் அதிகரித்து இருப்பதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
காவிரியில் நீர்வரத்து அதிகமானதை தொடர்ந்து நேற்று காலை மேட்டூர் அணை திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் பழனிச்சாமி மேட்டூர் அணையை திறந்து வைத்தார். மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும் காவிரியில் வெள்ளம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அணை திறக்கப்பட்ட பின்பும் கூட நீர் வரத்து 2 லட்சம் கன அடியாக நீடித்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.15 அடியாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி திறந்து விடப்படுகிறது. இன்னும் மேற்கு கால்வாயில் இருந்து 500 கனஅடி திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரியில் இருந்து பெரிய அளவில் தண்ணீர் ஓடுகிறது.
முக்கியமாக மேட்டூரை அடுத்து இருக்கும் பகுதியில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள கிராமங்கள், ஓசூரை அடுத்து உள்ள கிராமங்கள், ஒகேனக்கலை சுற்றி இருக்கும் வீடுகளுக்கு அருகே காவிரியில் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது.
இதனால் தற்போது கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி காவிரியில் அதிக அளவு வெள்ளம் வருகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications