Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாதாரண விவசாயிக்கு சம்மன்.. இதுல "சாதி" ஏன் வந்தது தெரியுமா? சேலத்தை இழுக்காதீங்க.. அண்ணாமலை சரவெடி

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் விவசாயிகளுக்கு சாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய விவகாரத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.. இந்நிலையில், சம்மன் ஏன் விவசாயிகளுக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் தந்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அப்பம்மா சமுத்திரம் என்ற ஊராட்சியை சேர்ந்த சகோதரர்கள் கண்ணையன் + கிருஷ்ணன்.. இவர்கள் பட்டியலின விவசாயிகளாவர்.. இவர்களுக்கு சொந்தமான 6.5 ஏக்கர் விவசாய நிலத்தை பாஜகவின் சேலம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குணசேகரன் என்பவர் அபகரிக்க முயன்றதாக தெரிகிறது.

திருச்செந்தூர்- நெல்லை இடையே நாளை முதல் அனைத்து பயணிகள் ரயில்களும் வழக்கம் போல் இயங்கும்

திடீர் சம்மன்: இதற்காக, 2 விவசாயிகளுக்கும் தொடர்ந்து டார்ச்சர் தந்து கொண்டே வந்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும், இதன்காரணமாக, போலீசிலும் இது தொடர்பாக புகார் தரப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜூலை 5ம் தேதி சகோதரர்கள் இருவருமே, சென்னைக்கு வரவேண்டும் என்று அவர்களது சாதிப் பெயரை குறிப்பிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அந்த சம்மனில், வீட்டு நம்பர் உட்பட வேறு எந்த விவரங்களும் இல்லாமல் வெறும் சாதி பெயரை மட்டுமே குறிப்பிட்டு சம்மன் வந்திருக்கிறது.

வங்கி கணக்கு: சாப்பாட்டுக்கே தாங்கள் கஷ்டப்பட்டு வரும்போது, மத்திய அரசு தரும் 6 ஆயிரம் நிதி உதவியை பெற்று பெற்றுக்கொண்டு, ரேஷன் அரிசி வாங்கி சமைத்து சாப்பிட்டு வரும்போது, தங்களுக்கு சம்மன் வந்துள்ளதா? என்று அதிர்ந்து போனார்கள். அதுமட்டுமல்ல, இவர்களது வங்கி கணக்கில் வெறும் 500 ரூபாய் மட்டுமே இருக்கும்போது, தங்கள் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக குற்றம்சாட்டி சம்மன் வந்துள்ளதால் பததற்றமாகிவிட்டனர்.

இதனால் சென்னையில் விசாரணைக்கு ஆஜராகினார்கள்.. மேலும், தங்களது 6.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும், பாஜக நிர்வாகி மீது போலீசில் புகார் தந்துள்ளனர். ஆனால், சட்டவிரோத பணப்பரிவர்த்தனைக்காக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியுள்ள சம்பவத்திற்கு, ஜாதி பெயரை குறிப்பிட்டு கடிதம் அனுப்பிய அதிகாரிகளின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

ஏழை விவசாயிகள்: ஏழை விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது எதற்காக என்பது குறித்தும் தேசிய அமலாக்கத்துறை இயக்குனரகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், 2 விவசாயிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்க தந்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, "அமலாக்கத் துறையின் பணிகள் குறித்து தெரியாமல் யாராவது பேசினால், அதற்கு என்ன பதில் சொல்றது? சேலம் மாவட்டத்தை பொறுத்தவர், பாஜக அங்கு 3 மாவட்டங்களாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 12 செயலாளர்கள் வீதம் சேலத்தில் மட்டும் 36 மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள்.

மாவட்ட செயலாளர்கள்: தமிழகம் முழுவதும் 750 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள்.. அதில் ஒரு மாவட்ட செயலாளர் என்னை வந்து பார்த்தார்.. அவர் படித்தது வெறும் 10-ம் வகுப்பு மட்டுமே. அமலாக்க துறைக்கு தனக்கு ஸ்பெல்லிங்கூட தெரியாது என்று என்னிடம் சொன்னார்.. அப்படியிருக்கும்போது, அவர் எப்படி அமலாக்கத் துறையை அழைத்து சோதனை நடத்த செல்லியிருப்பார்?

சேலம் விவசாயிகளுக்கு வனத்துறை சட்டத்தின் கீழ்தான், சம்மன் தரப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில், காட்டெருமையை வேட்டையாடிய வழக்கில், விவசாயிகள் 2 பேருமே குற்றவாளிகளாக இருந்திருக்கிறார்கள்.. இதுகுறித்து வனத்துறை அமலாக்கத் துறைக்கு கடிதமும் எழுதியிருக்கிறார்கள்.. அமலாக்கத்துறைக்கு வனத்துறை தொடர்பான குற்றங்களை எடுத்து விசாரிப்பதற்கான அதிகாரம் உள்ளது.. இந்த அடிப்படையில்தான் அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விமர்சனங்கள்: ஆனால், அந்த நோட்டீஸில் சாதி பெயர் இடம்பெற்றிருப்பதை பாஜகவும் ஏற்கவில்லை. எனவே, அந்த நோட்டீஸ் அனுப்பிய முறையை விமர்சிக்கலாம்... ஆனால், அமலாக்கத் துறைக்கு கொடுக்கப்பட்டுள்ள ஃஎப்ஐஆரில் சாதி பெயர் உள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம் என்று நான் யூகிக்கிறேன். அதனால், இந்த சம்பவத்தில் பாஜகவுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. இந்த கேள்வியை நீங்கள் வனத்துறை அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும்.

தாங்கள் அமலாக்கத் துறைக்கு கடிதமே எழுதவில்லை என்று மாநில அரசு அல்லது வனத்துறை சொல்லட்டும்.. அமலாக்கத் துறை நோட்டீஸில் என்ன கேட்கப்பட்டிருக்கிறது? விவசாயிகளின் வங்கிக்கணக்கு எண் மற்றும் ஆதார் எண், இவைகளில் எல்லாம் இதில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார் அண்ணாமலை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+