எஃகு கோட்டையாக நிற்கும் எடப்பாடி தொகுதி.. இங்கு எப்போதும் அதிமுகவின் ஆட்டம் தான்! கடந்து வந்த பாதை

Subscribe to Oneindia Tamil

சேலம்: தமிழ்நாட்டில் உள்ள நட்சத்திர தொகுதிகளில் ஒன்று எடப்பாடி.. அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதி.. இந்த தொகுதியில் கடந்த காலங்களில் எந்த கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது? அதிமுகவின் கோட்டையான இந்த தொகுதியின் கடந்த கால தேர்தல் வரலாறு குறித்து நாம் பார்க்கலாம்!

தமிழ்நாட்டில் சுதந்திரம் அடைந்தது முதலே இருக்கும் தொகுதிகளில் ஒன்று தான் எடப்பாடி தொகுதி. அதன் பிறகு பல முறை தொகுதி மறுசீரமைப்புகள் நடந்தாலும் கூட எடப்பாடி தொகுதி அதில் அனைத்திலும் இருந்து சமாளித்தது.

Edappadi assembly 2026

எடப்பாடி தொகுதி

இது கிட்டத்தட்டத் திராவிட கட்சிகள், அதிலும் குறிப்பாக அதிமுகவின் கோட்டை என்றே சொல்லலாம். இந்த தொகுதியில் காங்கிரஸ் வெறும் இரு முறை மட்டுமே வென்றுள்ளது. ஒன்று சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த 1952 தேர்தல். அப்போது எதிர்க்கட்சி எனச் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு யாரும் இல்லாததால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது. இதற்குப் பிறகு இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு நடந்த 1984 தேர்தலில் மட்டுமே காங்கிரஸ் இந்த தொகுதியில் வென்றது.

திமுகவுக்கும் இந்த தொகுதியில் கிட்டத்தட்ட இதே நிலை தான். இந்த தொகுதியில் திமுகவும் இரண்டு முறை மட்டுமே வென்றுள்ளது. 1967, 1971 என இரு முறை மட்டுமே திமுக இந்த தொகுதியில் வென்றுள்ளது. அதன் பிறகு ஒரு முறை கூட திமுகவால் இந்த தொகுதியில் வெல்லவே முடியவில்லை. அடுத்து பாமக தொகுதியில் 3 முறை வென்றுள்ளனர். 1996, 2006ல் திமுக கூட்டணியிலும், 2001ல் அதிமுக கூட்டணியிலும் போட்டியிட்டு பாமக இந்த தொகுதியில் வென்றுள்ளது.

அதிமுகவின் கோட்டை

ஆனால், உண்மையில் இந்த தொகுதியின் ராஜா என்றால் அது அதிமுக தான். 1977, 1980, 1989, 1991, 2011, 2016, 2021 என ஏழு முறை இந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதிலும் எடப்பாடி மட்டும் இந்த தொகுதியில் 7 முறை போட்டியிட்டு 5 முறை வென்றுள்ளார். 1996 மற்றும் 2006 தேர்தலில் மட்டுமே எடப்பாடி இந்த தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா தலைமையில் அதிமுக சந்தித்த கடைசி தேர்தலான 2016ல் இந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமி 98,700 வாக்குகளைப் பெற்றார். அப்போது தனித்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளரை விட சுமார் 42,000 வாக்குகளை அவர் கூடுதலாகப் பெற்றார். 2021ல் அவர் முதல்வராகத் தேர்தலைச் சந்தித்த நிலையில், அப்போது அவரது மைலேஜ் கூடியிருந்தது. அந்த தேர்தலில் சுமார் 1.63 லட்சம் வாக்குகளைப் பெற்ற எடப்பாடி, சுமார் 93 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

எடப்பாடியில் உள்ள கிராம சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. புறவழிச் சாலை, புதிய அரசு மருத்துவமனை கட்டிடம், விரிவாக்கப்பட்ட பாலம், சரபங்கா ஆற்றின் குறுக்கே பாலங்கள், அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி, எனப் பல திட்டங்கள் இங்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இப்படி இபிஎஸ் தனது தொகுதியை மிகச் சிறப்பாகவே கவனித்து வருகிறார். இதனால் அவர் மீது எந்தவொரு கோபமும் தென்படவில்லை.

யாருக்கு வாய்ப்பு?

இந்த முறை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக சார்பில் காசி, நாதக சார்பில் பிரியதர்ஷினி போட்டியிடுகிறார்கள். ஆனாலும், எடப்பாடி தொகுதியில் அதிமுக கோட்டையாக உள்ளதாலும் அதிமுக வென்றால் முதல்வர் தொகுதி என்ற சிறப்பை பெறும் என்பதாலும் அதிமுகவே இங்கு வெல்ல வாய்ப்பு அதிகம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+