Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொதப்பிய விஜய் கட்சி! கச்சிதமாக நிற்கும் திமுக, அதிமுக! எடப்பாடி தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சேலம்: தமிழ்நாட்டில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்து நேற்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் நட்சத்திர தொகுதியாக இருக்கும் எடப்பாடியில் மொத்தம் 36 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்த சூழலில், இறுதியாக இப்போது 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் களம் கிளைமேக்ஸை நெருங்கி வருகிறது. நேற்றைய தினம் மாநிலத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. வேட்புமனு வாபஸ் பெறும் காலம் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டன. இதற்கிடையே தமிழகத்தின் நட்சத்திர தொகுதியான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் யாரெல்லாம் ரேஸில் உள்ளனர் என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம்!

Edappadi Assembly Final List of 15 Candidates Announced After Scrutiny in tamil nadu election 2026

36 வேட்புமனுக்கள்

எடப்பாடி தொகுதியைப் பொறுத்தவரை மொத்தம் 36 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதாவது ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது, மாற்று வேட்பாளர்கள் என எல்லாம் சேர்ந்து மொத்தம் 36 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 15 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 16 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும், 5 பேர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இறுதியில் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

திமுக, அதிமுக

முக்கிய கட்சிகளைப் பொறுத்தவரை இங்கு மண்ணின் மைந்தனாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து 4 வேட்புமனுக்கள் தாக்கலாகி இருக்கிறது. அதில் மூன்று மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஒரு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. திமுக தரப்பில் காசி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அவரது பெயரிலும் 4 வேட்புமனுக்கள் வந்துள்ளன. அதில் ஒன்று ஏற்கப்பட்டுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் இந்த தொகுதியில் பிரியதர்ஷினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். அவரது வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது.

சொதப்பிய தவெக

விஜய்யின் தவெக தரப்பிற்குத் தான் இந்த தொகுதியில் அதிர்ச்சி காத்திருந்தது. தேர்தலுக்கு முன்பே விஜய் தரப்பிற்குத் தோல்வியைக் கொடுத்த தொகுதியாக எடப்பாடி தொகுதி மாறியுள்ளது. தவெக தரப்பில் அருண்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். மாற்று வேட்பாளராக அவரது மனைவி நித்யா என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், அவர்கள் இருவரது விண்ணப்பத்திலும் பிழை இருப்பதாகச் சொல்லி வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையே வேட்புமனு பரிசீலனையின்போது அவர்கள் மாயமானதாகவும் சொல்லப்படுகிறது. வேட்புமனுவை நிராகரிக்க இதுவே காரணம் என்கிறார்கள்.

இதர கட்சிகளைப் பொறுத்தவரை சசிகலாவின் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த சுரேஷ் என்பவரின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கோவிந்தராஜ் களமிறங்குகிறார். மறுபுறம் பகுஜுன் சமாஜ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த வீரம்மாள் என்பவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

களத்தில் உள்ள வேட்பாளர்கள்

  • அஇபுதமமுக- சுரேஷ்
  • திமுக- காசி
  • அதிமுக- எடப்பாடி பழனிசாமி
  • தவக- கோவிந்தராஜ்
  • நாம் தமிழர்- பிரியதர்ஷினி

இப்படி கட்சிகள் சார்பில் 5 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இது தவிரவும் சுயேச்சைகளாக 10 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஏற்கனவே சின்னம் ஒதுக்கப்பட்ட சூழலில், சுயேச்சைகளுக்கும் நேற்றைய தினம் சின்னம் ஒதுக்கப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+