கொரோனா: தமிழகம் கேட்டதில் போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.. முதல்வர் கடும் விமர்சனம்
சேலம்: தமிழகம் கேட்டிருந்த கொரோனா நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் பேசுகையில் தமிழகத்தில் நாள்தோறும் 13,000 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் செயல்பட்டதால் கொரோனா இல்லாத மாவட்டமானது சேலம்.

கொரோனா
தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பரிசோதனை அதிகம் செய்யப்படுகிறது.

சலூன் கடைகள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக இல்லை. மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரிலேயே அடுத்தக்கட்ட நகர்வுகள் இருக்கும். தமிழகம் கேட்ட நிதியில் போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. ஆட்டோக்களை இயக்கவும் சலூன்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சட்டம்
பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக் கவசம் அணிய வேண்டும். பட்டியலினத்தவர்களை விமர்சித்ததால்தான் பாரதி கைது செய்யப்பட்டார். மற்றபடி தமிழக அரசுக்கும் கைதுக்கும் சம்பந்தமில்லை, சட்டத்தின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்
அவதூறாக பேசிய போதே கட்சித் தலைவர் என்ற முறையில் ஆர் எஸ் பாரதியை, மு.க. ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக ஸ்டாலின், அதிமுக அரசு மீது புகார் கூறுகிறார். ஆர்.எஸ். பாரதி என்ன விஞ்ஞானியா? இ டெண்டரில் ஊழல் என ஆர்.எஸ். பாரதி தெரிவித்ததில் துளிக் கூட உண்மையில்லை.

ஆர்.எஸ்.பாரதி என்ன விஞ்ஞானியா?
ஏதோ விஞ்ஞானி போல் பத்திரிகை விளம்பரத்திற்காக பாரதி புகார் கொடுக்கிறார். ஆர் எஸ் பாரதி தரும் புகார்களின் உண்மைத்தன்மையை ஊடகங்கள் ஆராய வேண்டும். புறநகரங்களில் சிறு குறு தொழில்கள் இயங்க தொடங்கியுள்ளன. கொரோனா பொது முடக்கம் அமலில் உள்ள போதும் தமிழகத்தில் அதிக தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தொடரும் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இலவச மின்சாரம்
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையில் மின்சார திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இந்த திருத்த மசோதாவால் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோகும் என்பதால் அந்த திருத்தத்தை தற்காலிமாக நிறுத்தி வைக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கெனவே பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் என இன்று ஆணித்தரமாக எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications