எதிர்க்கட்சிகள் என்றால் அப்படிதான்.. தேமுதிகவுடன் எந்த இழுபறியும் இல்லை.. முதல்வர் பளீச்
ஓமலூர்: எதிர்க்கட்சிகள் என்றால் விமர்சனங்களை முன்வைப்பார்கள்தான். தேமுதிகவுடனான கூட்டணியில் எங்களுக்கு எந்த இழுபறியும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேமுதிகவுடன் அதிமுகவுக்கு இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சேலத்தில் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கோடை காலத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டால் அதை தீர்ப்பது குறித்து ஆலோசனை நடத்த சேலம் வந்துள்ளேன்.

தேர்தல் அறிவித்து விட்டால் அதிகாரிகளை சந்திக்க இயலாது. அதனால் நான் தற்போதே சந்தித்தேன். தேமுதிகவுடன் எந்த இழுபறியும் கிடையாது.
எதிர்க்கட்சிகள் என்றால் விமர்சனங்களை முன்வைப்பார்கள்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும். தேமுதிக ஆலோசித்து முடிவெடுக்கும். திமுகவை விமர்சித்த வைகோ தற்போது எப்படி புகழ்ந்து வருகிறார். பேரறிவாளனை பரோலில் விடுவித்தது அதிமுக அரசுதான்.
7 பேர் விடுதலையை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகிறார்கள். 7 பேர் விடுதலைக்காக திமுக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மனித சங்கிலி என்ற நாடகம் நடத்தப்படுகிறது. 7 பேர் விடுதலை குறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவை கூட்டத்தில் என்ன கருத்தை எழுதி வைத்திருக்கிறார் என்பது எனக்கு தெரியும்.
அரசியல் நாகரீகம் கருதி
அதை நான் சொல்ல விரும்பவில்லை.
திமுக அமைச்சரவை கூட்டத்தில் ஏழு பேரில் ஒருவர் ஒருவரை மட்டும் விடுவிக்க குறிப்பு எழுதி உள்ளனர்
. இப்பிரச்சினையில் அதிமுகவை குறை கூட திமுகவிற்கு எந்தவித அருகதையும் தகுதியும் கிடையாது.
அதிமுக ஆட்சியில் குறைகள் குறித்து திமுக பூதக் கண்ணாடி வைத்துத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது
. அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்தது பொறுக்க முடியாமல் திமுக நாள்தோறும் பொய் புகார்களை கூறி வருகிறது என்றார்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications