எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று பிறந்தநாள்.. பிரமாண்ட கேக் வெட்டி கொண்டாட்டம்.. வயது எத்தனை தெரியுமா?
சேலம்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சேலத்தில் 70 கிலோ கேக் வெட்டி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் அவர் பிறந்தநாள் கொண்டாடினார்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று பிறந்தநாளாகும். அவர் இன்று தனது 70வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையடுத்து இன்று காலையில் சேலத்தில் உள்ள அவரது வீட்டில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி கேக் வெட்டி தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு வழங்கினார். எடப்பாடி பழனிச்சாமியின் 70 வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் பிரமாண்டமான 70 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமியை பொறுத்தவரை அவர் படிப்படியாக அரசியலில் உயர்ந்து முதல்வர் பதவியை எட்டிப்பிடித்தார். சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் 1954ம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை பெயர் கருப்ப கவுண்டர். தாய் பெயர் தவசியம்மாள். தொடக்கத்தில் வெல்லம் வியாபாரம் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி வெல்ல வியாபாரம் செய்தார்.

அதன்பிறகு தனது 17வது வயதில் எம்ஜிஆர் மீது கொண்ட அன்பால் அதிமுகவில் இணைந்தார். 1973ம் ஆண்டு சிலுவம்பாளையம் கிளைச் செயலாளர் பதவியை பெற்றார். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு 1989ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா அணி சார்பில் எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன்பிறகு 1991, 2011, 2016, 2019 தேர்தல்களில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு எம்ஏவானார். இவர் ஜெயலலிதா அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தார். ஜெயலலிதா மறைந்த பிறகு முதல்வரானார். தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

முன்னதாக கடந்த 1998 ல் திருச்செங்கோடு தொகுதி எம்பியாகவும் அவர் வெற்றி பெற்று இருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிற கட்சிகளின் தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications