எடப்பாடி ஊரிலேயே ஓட்டை போட்ட தவெக.. சேலம் முன்னாள் எம்எல்ஏ-வை தூக்கிய செங்கோட்டையன்!
சென்னை: தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி சி.கிருஷ்ணன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அத்தனை பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தின் முக்கிய நிர்வாகியை செங்கோட்டையன் தூக்கி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஜூலை மாதமே தொடங்கிவிட்ட எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு மாவட்டமாக பயணித்து வேட்பாளர்களை உறுதி செய்தார். இதனிடையே அதிமுகவில் விருப்ப மனு தாக்கல் தொடங்கி இருக்கிறது.

ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் அதிமுக சார்பாக போட்டியிட விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். இதுவரை அதிமுக 5 ஆண்டுகளுக்கு மேல் எதிர்க்கட்சியாக இருந்ததாக வரலாறே இல்லை.
இதனால் அதிமுகவினர் தீவிரமாக பணியாற்ற தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து வெளியேற்றி வருகிறார்.
அந்த வகையில் சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மற்றும் எம்ஜிஆர் மன்றச் செயலாளர் பல்பாக்சி சி.கிருஷ்ணன் கொள்கைகளுக்கு முரணாகவும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு கற்பிக்கும் வகையிலும் செயல்பட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அத்தனை பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சி.கிருஷ்ணனுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியை எடப்பாடி பழனிசாமி நீக்கி இருப்பது பேசுபொருளாகியது.
ஆனால் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு கால தாமதமானது என்று தெரிய வந்துள்ளது. ஏனென்றால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ சி.கிருஷ்ணன், செங்கோட்டையன் முன்னிலையில் நேற்றே தவெகவில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே முக்கிய நிர்வாகிகள் தவெக பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர்.
இதற்கு முன்பாக மைத்ரேயன், அன்வர் ராஜா உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து திமுக பக்கம் சென்றனர். அண்ணா அறிவாலயம் வந்த பின்னரே, அவர்கள் திமுகவில் இணைய இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வந்தது. இதன்பின் வேக வேகமாக இருவரும் நீக்கி அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டது. தற்போது சொந்த மாவட்டத்திலேயே நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்காணிக்காமல் எடப்பாடி பழனிசாமி தாமதமாக நடவடிக்கை எடுத்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications