Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை உதயநிதி இன்னும் சொல்லல.. திமுக நாடகமாடுது.. எடப்பாடி அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: "நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை உதயநிதி இதுவரை வெளியிடவில்லை. முழுமையாக வென்று எம்.பி.க்கள் இருந்தபோதும் நாடாளுமன்றத்தில் திமுக உரிய அழுத்தம் கொடுக்கவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற ஆளுங்கட்சியான திமுகவின் வெற்று அறிவிப்பினால்தான், நாம் இன்று விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம்." என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவி புனிதா, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த மாணவியின் வீட்டுக்கு இன்று நேரில் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர், மாணவியின் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

edappadi palaniswami dmk neet

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி இரட்டை வேடம் போடுகிறது. இந்த தேர்வைக் கொண்டு வந்ததும் திமுகதான், இன்றைக்கு அந்த தேர்வை ரத்து செய்வோம் என்று நாடகத்தை அரங்கேற்றுவதும் திமுகதான். இதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். இப்படியாக, நாட்டு மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகிறது திமுக அரசு.

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற ஆளுங்கட்சியான திமுகவின் வெற்று அறிவிப்பினால்தான், நாம் இன்று விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம். நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி, இளைஞர்களையும், மாணவர்களையும் திமுக பொய்யான செய்தியைக் கூறி ஏமாற்றி வருகிறது. மத்தியில் , காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோதுதான் இந்த தேர்வு கொண்டு வரப்பட்டது. பல ஆண்டு காலமாகியும், நீட் தேர்வை ரத்து செய்ய என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? இதனால், மாணவர்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது. எதுவுமே கிடையாது, பொய்ச் செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஒரு நாடகத்தைத்தான் அரங்கேற்றி வருகிறார்கள்.

நீட் தேர்வை ரத்து செய்வதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது எல்லாம் மக்களை ஏமாற்றும் செயல். ஏற்கெனவே அதிமுக ஆட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றினோம். இந்த தேர்வைக் கொண்டு வந்தது யார்? திமுகவைச் சேர்ந்த காந்திச்செல்வன், அப்போது சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில்தான் இந்த நீட் தேர்வைக் கொண்டு வந்தார்கள். இந்த நீட் தேர்வை யார் ரத்து செய்ய முடியும்? நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையைக் கொண்டு வந்துதான், இதை ரத்து செய்ய முடியும். அதற்காக திமுக என்ன முயற்சி எடுத்தது? மத்திய அரசுக்கு என்ன அழுத்தம் கொடுத்தனர்? நீட் தேர்வு இந்தியா முழுவதும் உள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல.

நீட் தேர்வு மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டம். காங்கிரஸ் - திமுக கூட்டணியில்தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதை புரிந்துகொள்ள வேண்டும். இப்போது ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களும் அவர்கள்தான். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் திமுகவே வென்றது. 2024-ல் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர்தான் நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையாக வெற்றி பெற்றனர். இவர்கள் மத்திய அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்திருந்தால், இதற்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கும். ஆனால், அவர்கள் எதையுமே செய்யவில்லை.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை உதயநிதி வெளியிடுவதாகச் சொன்னார். ஆனால், இதுவரை வெளியிடவில்லை. தமிழகத்தில் 1 கோடி பேரிடம் நீட் தேர்வை ரத்து செய்ய கையொப்பம் பெறுவதாக அறிவித்தனர். திமுக இளைஞரணி மாநில மாநாடு உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு ரத்து படிவத்தை வைத்திருந்தனர். அவை அனைத்தும் காலுக்கடியில் விழுந்து கிடந்த காட்சிகளைத் தொலைக்காட்சிகளில் கண்டோம்.

நாட்டு மக்களை ஏமாற்றுவதில் திமுகவும் திமுக அரசும் வல்லவர்கள். மாணவர்கள் இவர்களால் ஏமாந்து நிற்கின்றனர். பிரதமரை பலமுறை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்த போதும், நீட் தேர்வு குறித்து அழுத்தம் கொடுக்கவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு நிறைவேற 7.5 சதவீத இடஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதனால் தான் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+