‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு
சேலம்: சேலம் மாவட்டம் கொளத்தூருக்கு நிர்வாகிகளை சந்திக்க வந்த மேட்டூர் தவெக வேட்பாளர் செல்வத்தை, ஊருக்குள் நுழைய விடாமல் தவெகவினர் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'ஜனநாயகன்' படத்திற்கு தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை வாங்கி, தங்களிடமே அதிக விலைக்கு விற்றதாகவும், ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் தவெக வேட்பாளர் செல்வம் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த ஜனவரி மாதம் ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. படத்தை தணிக்கைக்கு அனுப்பிய படக்குழு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. சென்சார் சிக்கலால் ஜனவரியில் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் அவசர வழக்கு தொடர்ந்தது. பின்னர், வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு, முறையீட்டு தீர்ப்பாயம் சென்றுள்ளது. தேர்தலுக்குப் பிறகு ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தவெக கட்சியினர், சட்டசபை தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அண்மையில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் தவெக தலைவர் விஜய். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார் விஜய்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் செல்வம், மேட்டூர் தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர் பகுதி நிர்வாகிகளை சந்திக்க வருகை தந்தார். அவரை ஊருக்குள் நுழைய விடாமல் தவெகவினர் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'ஜனநாயகன்' படத்திற்கு தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை வாங்கி, தங்களிடமே அதிக விலைக்கு விற்றதாகவும், ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் தவெக வேட்பாளர் செல்வம் மீது குற்றம்சாட்டியுள்ளனர். தவெக நிர்வாகிகள் பலர் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வெளியாகாத ஜனநாயகன் படத்தின் டிக்கெட்களை அதிக விலைக்கு விற்றதாக தவெக வேட்பாளர் மீது, அவர்களின் கட்சியினரே குற்றம்சாட்டி தகராறில் ஈடுபட்டிருப்பது சேலம் மாவட்ட தவெகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி!












Click it and Unblock the Notifications