சேலத்தில் ஆட்டத்தை தொடங்கிய இபிஎஸ்.. அவசரமாக விரைந்த கே.பி.முனுசாமி, தம்பிதுரை.. என்ன பிளான்?
சேலம்: அதிமுகவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி கோஷங்கள் அதிகரித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியை கே.பி.முனுசாமி மற்றும் தம்பிதுரை ஆகியோர் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக மாவட்டச் செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே சென்னையில் உள்ள தங்களது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் இன்று காலை சென்னையில் உள்ள வீட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு சேலம் சென்றடைந்தார். சேலம் வந்த அவருக்கு தொண்டர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒற்றைத் தலைமையாரே, பொதுச் செயலாளரே உள்ளிட்ட கோஷங்களை அவரது ஆதரவாளர்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து மாலையில் அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் இபிஎஸ் ஈடுபடுவார் என்று தகவல் வெளியாகியது.
இதன் நடுவே அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் என்று கூறப்படு ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது திடீரென ஓபிஎஸ் தலைமை அலுவலகம் புறப்பட்டதால், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் வளர்மதி ஆகியோர் அங்கிருந்து கிளம்பினர். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த ஓபிஎஸ், ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்தநிலையில் சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் தம்பிதுரை ஆகியோர் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனால் மேலும் சில அதிமுக முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் சந்தித்துள்ளார். கடந்த இரு நாட்களாக எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகிகளை சந்தித்த நிலையில், சேலத்தில் மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தின் போது, பல்வேறு மாவட்ட செயலாளர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்ததாக தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம்












Click it and Unblock the Notifications