கனகாவுக்கு தகாத தொல்லை.. அத்துமீறிய ராமர்.. மண்வெட்டியால் குடும்பமே சேர்ந்து வெட்டி கொன்ற கொடூரம்
பாலியல் தொல்லை தந்த விவசாயி வெட்டி கொல்லப்பட்டார்
சேலம்: தம்பி பொண்டாட்டி கனகாவுக்கு ஓயாமல் செக்ஸ் தொல்லை தந்துள்ளார் ராமர்.. இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்து ராமரை மண்வெட்டியாலேயே வெட்டி கொன்றுள்ளனர்!
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டியை சேர்ந்தவர் ராமர்.. 41 வயது விவசாயி.. சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவரது மனைவி சாந்தி.. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு சாந்தி, குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் தன்னுடைய சொந்த தோட்டத்தில் ராமர் சடலமாக விழுந்து கிடந்தார்.. உடம்பெல்லாம் அவருக்கு ரத்தகாயம் இருந்தது.. தலையில் பலமான அடிபட்டிருந்தது.. உடம்பு முழுக்க எலக்ட்ரிக் கம்பிகள் சுற்றப்பட்டிருந்தது!
தகவலறிந்து கெங்கவல்லி போலீசார் விரைந்து வந்தனர்.. கொடூரமாக ராமரை அடித்தே கொன்றுள்ளனர்.. ஆனால் கவனத்தை திசை திருப்ப உடம்பில் கரண்ட் தாக்கி இறந்ததுபோல, எலக்ட்ரிக் கம்பியை சுற்றியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ராமரின் சித்தப்பா மகன் கலியமூர்த்தி.. அவரது மனைவி கனகாவின் தந்தை உள்ளிட்டோரை பிடித்து தீவிரமாக விசாரித்தனர்.. அப்போதுதான் விஷயம் வெளிப்பட்டது. மணக்காடு பகுதியில்தான் ராமரின் தோட்டம் உள்ளது.. இந்த தோட்டத்துக்கு பக்கத்தில்தான் ராமரின் தம்பி கலியமூர்த்தி - கனகா வீடு உள்ளது..
ராமர் எப்போதெல்லாம் தோட்டத்துக்கு போகிறாரோ, அப்போதெல்லாம் கனகாவுக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார்.. தினமும் ராமரின் சில்மிஷமும், செக்ஸ் தொல்லையும் தாங்காமல் கனகா அவதிப்பட்டார். ஒரு கட்டத்தில், இதை பற்றி கணவரிடமே சொல்லிவிடவும், அண்ணன் மீது கடுமையான ஆத்திரம் அடைந்தார் கலியமூர்த்தி.
அதனால் ஒருசில உறவினர்களுடன் சேர்ந்து ஏற்கனவே ராமரை கலியமூர்த்தி எச்சரித்தார்.. இனி செக்ஸ் தொல்லை தர மாட்டேன் என்றும் சத்தியம் செய்திருக்கிறார்.. ஆனால் திரும்பவும் ராமர் வேலையை காட்டி உள்ளார்.. சம்பவத்தன்று கனகா வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, அங்கு சென்ற ராமர், கனகாவின் கையை பிடித்து இழுத்து.. திரும்பவும் சில்மிஷம் செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் கலியமூர்த்தி கொதித்து போய்விட்டார்.. தன்னுடைய மாமனாருக்கு தகவல் சொல்லி வரவழைத்து, பிறகு எல்லாரும் ஒன்று சேர்ந்து ராமரை மண்வெட்டியால் வெட்டி கொன்றுள்ளனர். இதற்குபிறகுதான், கொலையை மறைக்க, ராமரின் உடல்மீது எலக்ட்ரிக் கம்பிகளை சுற்றி வைத்தனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இப்போது, கலியமூர்த்தி, கனகா, கனகாவின் அப்பா 3 பேரும் கைதாகி உள்ளனர்!
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications