110 நாள் பயிர்! 45 நாளுக்கு மட்டும் மேட்டூரில் தண்ணீர் திறந்தால் எப்படி? கடைமடைக்கே வராதே! விவசாயி

Subscribe to Oneindia Tamil

சேலம்: 110 நாட்கள் பயிருக்கு 45 நாட்களுக்கு மட்டும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் விட்டால், மீதமுள்ள 55 நாட்களுக்கு தண்ணீருக்கு என்ன செய்வது என விவசாயி முருகானந்தம் கேள்வி எழுப்பியுள்ளார். மேட்டூர் அணையில் முதல்வர் விஜய் 45 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து

இதுகுறித்து விவசாயி முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிட முதல்வர் விஜய் வந்திருக்கிறார். தற்போதைக்கு 91 அடிதான் இருக்கிறது.

mettur joseph vijay

இந்த தண்ணீர் போதுமானதாக இருக்காது. அதுவும் 45 நாட்களுக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டும் என சொல்கிறார்கள். 110 நாட்கள் பயிருக்கு 45 நாட்களுக்கு தண்ணீர் விட்டால், மீதமுள்ள 55 நாட்களுக்கு தண்ணீருக்கு என்ன செய்வது என தெரியவில்லை.

இதற்கு ஒரே தீர்வு கர்நாடகா காவிரியை திறந்தால் மட்டுமே பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்கும். எனவே கர்நாடகாவிடம் போராடி 110 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடக் கோருமாறு முதல்வர் விஜய்யை கேட்டுக் கொள்கிறேன்.

மேட்டூரில் விஜய் திறந்துவிடும் தண்ணீர் கடைமடை வரை போய் சேராது. பாதி தூரத்திற்குத்தான் செல்லும். அதுவும் பயன்படாத தண்ணீராகத்தான் தெரிகிறது. இவ்வாறு அந்த விவசாயி தெரிவித்திருந்தார்.

குறுவை சாகுபடிக்காக வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால் போதிய நீர் இருப்பு இல்லாதது, கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடாதது போன்ற காரணங்களால் நடப்பு ஆண்டில் குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணையில் இருந்து தமிழக அரசால் தண்ணீர் திறந்துவிட முடியவில்லை.

இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து இன்றைய தினம் விவசாயத்திற்காக முதல்வர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார்.

45 நாட்களுக்கு இந்த நீர் திறப்பு இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள். அதாவது தாமதமாக மேட்டூர் அணையை திறப்பதால் விவசாயிகளுக்கு எந்த பெரிய அளவிலும் பலன் இல்லை.

ஜூன் மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை நீரை நம்பித்தான் ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடியை விவசாயிகள் தொடங்குவார். தற்போது 100 நாட்களுக்காவது நீர் பாசனம் செய்ய வேண்டும். ஆனால் வெறும் 45 நாட்கள் மட்டும் திறப்பது என்பது வீண் என்கிறார்கள்.

இதுகுறித்து அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அதில், மேட்டூர் அணையில் இருக்கும் நீரின் அளவுக்கேற்ப தற்போது 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை நீரின் அளவு அதிகரித்தால் தண்ணீரை வெளியேற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

93 ஆவது முறையாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதில் 62ஆவது முறை தாமதமாக திறக்கப்பட்டது வேதனைக்குரிய விஷயமாகும்.

டெல்டா விவசாயிகள் போர்வெல் மோட்டார் வசதியை பெற்றிருந்தாலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டதால்தான் குறுவை சாகுபடிக்கு காவிரி நீரை நம்பியிருக்கிறார்கள். போர்வெல் இல்லாத டெல்டா மாவட்ட விவசாயிகள் முழுக்க முழுக்க காவிரியை நம்பியே பயிர் செய்து வருகிறார்கள்.

எனவ 45 நாட்களுடன் நீர் திறப்பை நிறுத்தாமல் 100 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1 டிஎம்சி என்கிற விகிதத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இப்படி தண்ணீரை திறக்க வேண்டும் என்றால் கர்நாடகா காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+