தவெகவில் இணைய போறீர்களா?! பெங்களூர் புகழேந்தி சொன்னது என்ன? சைக்கிள் கேப்பில் செங்கோட்டையனையும்..!

Subscribe to Oneindia Tamil

சேலம்: தவெகவுக்கு ஆதரவாகவே தொடர்ந்து பேசி வருகிறீர்களே, அக்கட்சியில் இருந்து ஏதாவது அழைப்பு வந்துள்ளதா என நிருபர் கேட்ட கேள்விக்கு பெங்களூர் புகழேந்தி என்ன பதில் சொன்னார் என்பதை பார்க்கலாம்.

Bangalore Puglendi

சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தவெகவில் இணைய போறீர்களா என நல்ல கேள்வியை என்னிடம் கேட்டுள்ளீர்கள். எனக்கு பெயர் வைத்தவர் பெரியார். இங்குதான் திராவிடர் கழகம் உருவானது.

தந்தை பெரியாரை சேலம் அழைத்து வந்து பிரச்சாரம் செய்தால் திமுக தோற்றுவிடும் என்றார்கள். ஆனால் பணமரத்துப்பட்டி ராஜாராம், பெரியாரை அழைத்து வந்து பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்தது.

பின்னர் எல்லா இடங்களிலும் பெரியாரை அழைத்து பிரச்சாரம் செய்தனர். பெரியாரின் படத்தை போட்டால் ஓட்டு விழுமா என திராவிட இயக்கங்களுக்கு தெரியவில்லை. ஆனால் விஜய், பெரியார் படத்தை பெரிதாக போட்டுள்ளார்.

அதன் பக்கத்தில் அண்ணல் அம்பேத்கர், எம்ஜிஆர், அண்ணா, அஞ்சலை அம்மாள் படங்களையும் விஜய் பெரிதாக வைத்துள்ளார். அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் விஜய், எம்ஜிஆர் குறித்து பெருமையாக பேசியிருந்தார்.

ஆக திராவிட இயக்கத் தலைவர்களை விஜய் கொண்டாடுகிறார் என்றால் நான் அவரை பாராட்டத்தான் செய்வேன். நான் விஜய்யை புகழ்ந்து பேசத்தான் செய்வேன். எம்ஜிஆர் குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் புகழ்ந்து பேசிய போது நான் அவரையும் பாராட்டி பேசியுள்ளேன். அமைச்சர் தங்கம் தென்னரசையும் நான் பாராட்டினேன்.

அந்த வகையில் தந்தை பெரியார் படத்தை பெரியதாக போட்டு விஜய் வருகிறார் என்றால் அவரை பாராட்டுவதில் என்ன தவறு? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை நான் 11 ஆண்டுகளாக ஏற்று நடத்தினேன். அவருக்கு பிணை வாங்கிக் கொடுத்தேன். நான் எந்த அரசு பதவிகளையும் வகிக்கவில்லை. பச்சை இங்கில் நான் கையெழுத்து போட்டதில்லை.

இத்தனை நாளாக நான் அதிமுக தொண்டனாகவே இருந்தேன். என் மீது எந்த கெட்ட பெயரும் இல்லை, நான் எந்த சொத்தையும் கொள்ளையடிக்கவில்லை. அப்படி இருக்கும் போது நான், தவெகவுக்கு என்றில்லை எந்த கட்சி வேண்டுமானாலும் செல்லலாம், என்னை யாரும் கேட்க முடியாது.

ஆனால் ஒரு கட்சியில் இருந்து பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு கொள்ளையடித்துவிட்டு, எம்பி, எம்எல்ஏவாக இருந்து தன்னை வளர்த்துக் கொண்டு இருக்கும் ஒருவர் அதிமுகவில் இருந்து விலகிச் செல்வதுதான் துரோகம் என்றார்.

அவர் மேலும் பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் 4 பிரிவாக அதிமுகவினர் மரியாதை செலுத்தியது வேதனை அளிக்கிறது. இயக்கத்தை ஒழிக்கும் எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.

நயினார் நாகேந்திரன் ரத்தத்தில் திராவிடத்தின் கொள்கையும் கோட்பாடும்தான் உள்ளது. தமிழகத்தில் மதகலவரத்தை தூண்ட நயினார் நாகேந்திரன் முயற்சிக்க வேண்டாம். எடப்பாடி பழனிசாமி ஒத்துழைத்தால் மட்டுமே அதிமுக ஒன்றிணையும். தற்போதைய கருத்துக் கணிப்பில் அதிமுகவை விட திமுக, தவெக முன்னிலையில் இருப்பது வேதனை அளிக்கிறது.

வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி. செங்கோட்டையன் அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டார். பாஜக பின்னார் யார் சென்றாலும் அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.

ஓபிஎஸ் எங்குச் சென்றாலும் இறுதியில் பாஜகவில்தான் சேருவார். பாஜகவில் இணைந்தால் ஓபிஎஸ்ஸுக்கு சீட் கொடுப்பதாக பேச்சு உள்ளது. விஜயின் ரோடு ஷோ ஒரு பாடத்தை புகட்டி விட்டது. இனி ரோடு ஷோ வேண்டாம்; பொதுக்கூட்டம் மூலம் மக்களை தலைவர்கள் சந்தித்தால் போதும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+