லிஃப்ட் கொடுத்த பாவத்துக்கு.. சரக்கு வாகனத்தை ஆட்டையபோட்ட அஜித்குமார்.. சேலத்தில் பகீர் சம்பவம்
சேலம்: சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே லிஃப்ட் கேட்டு சரக்கு வாகனத்தில் ஏறிய நபர் டிரைவர் அசந்த நேரத்தில் சரக்கு வாகனத்தையே கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நம்முடைய சமூகத்தில் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாங்க என்பதுபோல டிசைன், டிசைனாக ஏராளமான திருட்டுச் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. ஆன்லைன் திருட்டு, ஆஃப்லைன் திருட்டுனு பல ரூட்டுகளில் ஸ்கெட்ச் போட்டு திருட்டுத் தொழிலில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. லாரி திருட்டு, சைக்கிள் திருட்டு, நகை திருட்டுனு பல திருட்டுகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், சேலம் எடப்பாடி அருகே நடந்த ஒரு திருட்டுச் சம்பவம் பகீர் ரகம். எல்லா திருட்டையும் மீறி, யாரும் எதிர்பாராத ஒரு நூதன திருட்டு சம்பவத்தால் எடப்பாடி பகுதியே அதிர்ந்து போயுள்ளது. மூளைய எங்கேயாவது கடன் வாங்கிட்டு வருவியா என்பதுபோல் லிஃப்ட் கொடுத்த பாவத்துக்கு ஓட்டுநர் அசந்த நேரத்தில் சரக்கு வாகனத்தோடு எஸ்கேப்பான சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். சரக்கு வாகன ஓட்டுநரான இவர் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சங்ககிரி நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, சாலையில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் லிஃப்ட் கேட்டுள்ளார். இரக்கப்பட்ட ராஜமாணிக்கமும் வாகனத்தை நிறுத்தி அந்த இளைஞருக்கு லிஃப்ட் கொடுத்துள்ளார்.
அப்போது, ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு தண்ணீர் குடிப்பதற்காக சரக்கு வாகன ஓட்டுநர் ராஜமாணிக்கம் சென்றுள்ளார். அச்சமயத்தில் சாவியுடன் நின்ற சரக்கு வாகனத்தை அந்த இளைஞர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓட்டிச் சென்றுள்ளார். வண்டியை கடத்திச் சென்ற கையோடு செல்லும் வழியிலேயே வண்டியில் இருந்த அனைத்து அரிசி மூட்டைகளையும் பொதுமக்களுக்கு விற்பனை செய்து கொண்டே சென்றுள்ளார்.
பின்னர், அந்த சரக்கு வாகனம் பழக்கடை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் சரக்கு வாகனத்தை கடத்திய அஜித்குமார் என்ற இளைஞரை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். லிஃப்ட் கொடுத்ததால் முதலுக்கே ஏற்பட்ட இந்த திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல, சென்னை மாங்காடு அருகே உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அப்பெண்ணின் வீட்டுக்குள் மூதாட்டி ஒருவர் சர்வ சாதாரணமாக நுழைந்து நகையைத் திருடிக் கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார்.
வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அந்த வீட்டின் பெண்மணி மூதாட்டி ஒருவர் வீட்டுக்குள் நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பெண்ணின் கூச்சல் சப்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அவர்களது வீட்டுக்கு ஓடி வந்து பார்த்தபோது, உஷாரான மூதாட்டி அங்கிருந்து தப்பிக்க முயன்ற நிலையில் பொதுமக்கள் மூதாட்டியை மடக்கிப் பிடித்தனர்.
மூதாட்டியை சோதனை செய்தபோது 4 பவுன் நகை மற்றும் சில்லறை காசுகளை அவர் தனது கைப்பையில் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதில், மூதாட்டி வைத்திருந்த கைப்பையில் எந்தெந்த வீடுகளில் திருட வேண்டும் என்று எழுதப்பட்ட முகவரியுடன் வந்திருந்ததுதான் ஹைலைட். பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததும் உஷாரான மூதாட்டி மயக்கமடைவதைப் போல நடித்துள்ளார். இதையடுத்து, காவல் துறையினரிடம் போலீஸார் மூதாட்டியை ஒப்படைத்தனர்.
பட்டப்பகலில் இதுபோல திருட்டுச் சம்பவங்கள் நடப்பது மிகவும் வழக்கமாகிவிட்டன. சர்வ சாதாரணமாக லிஃப்ட் கேட்பது, முகவரி கேட்பது போன்று அசந்த நேரத்தில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிக்க வேண்டும்.
லிஃப்ட் கேட்பது, முகவரி கேட்பது, அனாதை ஆசிரமங்களுக்கு உதவித் தொகை கேட்பது என யாரேனும் வந்தால் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications