கிடுகிடுவென உயர்ந்தது.. காவிரியில் பெரும் வெள்ளம்.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Mettur dam reaches its peak for the third time

    சேலம்: காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், தற்போது மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகப்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.

    இதனால் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் கர்நாடகாவிலும் கடந்த மூன்று நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது.

    காவிரி எப்படி

    காவிரி எப்படி

    முக்கியமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான உத்தர கர்நாடகா, சிவமோகா, பெலகாவி, மடிகேரி, மைசூர், மங்களூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரியில் அதிக அளவில் நீர் திறந்து விடப்படுகிறது.

    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை

    இன்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,239 கனஅடியாக இருந்தது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,239 கனஅடியில் இருந்து 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி மொத்தமும் இதனால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    எங்கு எல்லாம் தண்ணீர்

    எங்கு எல்லாம் தண்ணீர்

    மேலும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 35000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அதேபோல் பிலி குண்டுலுவிற்கு நீர்வரத்து 18000 அடியில் இருந்து 30000 ஆயிரம் அடியாக உயர்ந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்படுகிறது.

    அதிக வேகம்

    அதிக வேகம்

    மேட்டூர் அணை ஏற்கனவே 120 அடியை எட்டிவிட்டது. இன்று காலை அணையில் இருந்து 10000 கனஅடி மட்டுமே நீர் வெளியேற்றப்பட்டது. அதிக நீர் வரத்து காரணமாக தற்போது மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 22,500 கனஅடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+