டெய்லி பால் ஊற்றியபோது பழக்கம்.. காதலர் தினத்தன்று சின்னதுரையுடன் உல்லாசம்.. சரமாரி வெட்டிய பிரகாஷ்
கணவன் அரிவாளால் வெட்டியதில் மனைவி படுகாயமடைந்தார்
சேலம்: சேலத்தில் காதலர் தினத்தன்று கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருந்த மனைவியைப் பார்த்து ஆத்திரமடைந்தார் லாரி டிரைவர் பிரகாஷ். ஆத்திரம் மண்டைக்கேறிய நிலையில் மனைவியை சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டார்.
உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் கள்ளக்காதலர்கள் இருவர் கணவரிடம் சிக்கி அடி வாங்கிய சம்பவம் சேலத்தை அதிர வைத்துள்ளது. சேலம் மாவட்டம் நடுவலூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். லாரி டிரைவராக இருக்கிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் வேறு உள்ளனர்.

இந்த நிலையில் சின்னதுரை என்பவருடன் கள்ளக் காதலில் திளைத்தார் பிரியா. இந்த சின்னதுரை யார் என்றால் வீட்டுக்கு டெய்லி பால் ஊற்ற வரும் பால் வியாபாரி. பசும்பாலுடன் பிரியா வீட்டுக்கு வந்து பால் ஊற்றிய அவர் கூடவே கள்ளக்காதலையும் சேர்த்து ஊட்டி விட்டு போயிருக்கிறார். இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர்.
டெய்லி காலையும், மாலையுமாக வந்து பால் ஊற்றிய சின்னதுரை பிரியாவுடன் ரொம்பவே நெருங்கி விட்டார். இதைக் கேள்விப்பட்ட பிரகாஷ் நொறுங்கி போய் விட்டார். மனைவியைக் கண்டித்தார். சின்னதுரையை இந்தப் பக்கம் கூட வரக் கூடாது என்று எச்சரித்தார். சின்னதுரையும் வீட்டுக்கு வந்து பால் ஊற்றுவதை நிறுத்தினார்.
ஆனால் இந்த கூட்டுக் களவாணிகளும் வேறு ரூபத்தில் காதலை வளர்த்து வந்தன. அதாவது பிரியா சின்னதுரை வீடு தேடி போய் விளையாட ஆரம்பித்தார். இப்படித்தான் நேற்று காதலர் தினம் வந்தது. நேற்று வெளி வேலையாக போயிருந்த பிரகாஷ் வீடு திரும்பினார். வீட்டில் பிரியா இல்லை. அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது "அவ அந்த சின்னதுரை வீட்டுக்குதான் போயிருக்கா.. போய்ப் பாரு" என்று கூறவே அதிர்ச்சியானார் பிரகாஷ்.
வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு சின்னதுரை வீட்டுக்கு ஓடினார். அங்கு போய்ப் பார்த்தால் கள்ளக்காதல் ஜோடி படு குஷியான நிலையில் காணப்பட்டனர். அவ்வளவுதான் அரிவாளை எடுத்து பிரியாவை சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டார் பிரகாஷ். கூடவே சின்னதுரைக்கும் வெட்டு விழுந்தது. இரண்டு பேரும் போட்ட சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் ஓடு வந்து பிரகாஷை தடுத்தனர்.
வெட்டுப்பட்ட சின்னதுரையும், பிரியாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications