இப்படியே குடிச்சு கூத்தடித்தால் குடும்பம் நடத்த வர மாட்டேன்.. தங்கமணி கறார்.. ஆவேசமான பாலசுப்பிரமணி!
சேலம் அருகே குடிபோதையில் மனைவியை கணவன் கொலை செய்துள்ளார்
சேலம்: "இப்படியே குடிச்சு கூத்தடித்தால், குடும்பம் நடத்த வர மாட்டேன்" என்று தங்கமணி கறாராக சொல்லி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணி, கொடுவாளை எடுத்து வந்து மனைவி கழுத்தை அறுத்துவிட்டார்.
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள வேட்டைக்காரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி 47 வயசாகிறது. தங்கமணி என்ற மனைவியும், மகள், மகன் உள்ளனர். மகளுக்கு கல்யாணமும் ஆகிவிட்டது.

பாலசுப்பிரமணி கூலி வேலை செய்கிறார். ஆனால் ராத்திரியில் தினமும் குடிச்சுட்டு வந்து தங்கமணியை போட்டு அடிப்பது வழக்கமாக வைத்துள்ளார்.
இப்படியே அடியும், உதையும் வாங்க தங்கமணியால் முடியவில்லை. அதனால் கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு போய்விட்டார். மனைவி வீட்டில் இல்லாதது பாலசுப்பிரமணியத்துக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
அதனால் மாமியார் வீட்டுக்கு போய் "சண்டையை மறந்துடு.. இனிமே சந்தோஷமா வாழலாம் வா"என்று கூப்பிட்டுள்ளார். அப்போதும் பாலசுப்பிரமணி செம போதையில்தான் இருந்தார். ஆனால் தங்கமணி அதற்கு மறுப்பு தெரிவிக்கவும், திரும்பவும் அங்கேயே சண்டை ஆரம்பமாகி உள்ளது.
ஆத்திரம் அதிகமாகிவிட்ட பாலசுப்பிரமணி, வீட்டுக்குள் கிடந்த கொடுவாளை எடுத்து வந்து தங்கமணியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி விட்டார். தங்கமணி ரத்தம் சொட்டச் சொட்ட தெருவுக்கு ஓடி வந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் தங்கமணியை ஆம்புலன்சில் ஏற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தும், வழியிலேயே தங்கமணி இறந்துவிட்டார். இந்த கொலை குறித்து மல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications