சேலம் விபத்து நடந்த விதம்.. மனசாட்சி இல்லாத தனியார் பஸ் டிரைவர்.. வாகன ஓட்டிகளுக்கு பெரிய பாடம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற ஐந்து பேர் தனியார் பேருந்து மோதிய விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நடந்த விதம், வேகத்தடை ஆகியவை வாகன ஓட்டிகளுக்கு முக்கியமான பாடமாக உள்ளது. என்ன தவறு நடந்தது என்பதை பார்ப்போம்.

நான்கு வழிச்சாலை வந்த பிறகு இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் அதிகமாக சிக்குவது அதிகரித்துள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அசுர வேகத்தில் பின்தொடர்ந்து வரும் பெரிய வாகனங்கள், திடீரென பிரேக் போடும், மோதி பெரும் விபத்தை ஏற்படுத்துகின்றன.

Salem Accident

அதேபோல் சாலையின் ஓரத்தில் சென்றால் கூட ஏறி வந்து இருசக்கர வாகன ஓட்டிகளை தள்ளிவிட்டு செல்லும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாகவே உள்ளன. சேலம் அருகே நடந்த கோர விபத்து அதற்கு சிறந்த உதாரணமாகும். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து திருச்செங்கோட்டிற்கு லாரி ஒன்று சரக்குகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை தேசிய நெடுஞ்சாலையில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த லாரி காலை 10.45 மணி அளவில் சேலம் மாவட்டம் வீராணத்தை அடுத்த சுக்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் வந்து கொண்டிருந்தது. பள்ளிக்கூடம் முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்ததால் லாரி திடீரென வேகத்தை குறைத்து மெதுவாக சென்றது.

லாரிக்கு பின்னால் இரண்டு இரு சக்கர வாகனங்கள் வந்தன. 2 பைக்கிலும் 8 பேர் இருந்தனர். லாரி மெதுவாக சென்றதும் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர்களும் சட்டென வேகத்தை குறைத்து மிகவும் மெதுவாக சென்றனர். வேகத்தடையை கவனிக்காத தனியார் பஸ் டிரைவர், அசுர வேகத்தை உடனே குறைக்க முடியாமல், அசுர வேகத்தில் சென்று இரண்டு இருசக்கர வாகனகள் மீதும் மோதியதுடன் லாரியின் பக்கத்தில் போய் முட்டி நின்றது. இதில் லாரிக்கும், பஸ்சுக்கும் இடையே 2 இருசக்கர வாகனங்களும் சிக்கி அப்பளம் போல் நொறுங்கின. பஸ்சின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் சிக்கிய 2 மோட்டார் சைக்கிள்களில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே எம்.தாதம்பட்டியை சேர்ந்த முருகன் (வயது 33) என்பது தெரிய வந்தது. அவருடைய மனைவி நந்தினி (28), 2 வயது மகன் கவின் ஆகியோரும் வந்தனர். விபத்தில் முருகன் உள்பட 3 பேரும் பலியானார்கள். முருகன், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நிலஅளவையராக பணிபுரிந்து வந்தார். முருகன், அவருடைய மனைவி, மகன் 3 பேரும் சேலம் மாவடடத்தில் நடந்த உறவினர் திருமண விழாவுக்கு வந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் மற்றொரு பைப்கில் சேலம் மாவட்டம் வீராணம் அருகே பூவனூர் போயர் தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி லட்சுமணன் (31) தனது மனைவி வேதவல்லி (28), மகன்கள் சின்னதுரை (6), திலிப் (4), கொழுந்தியாள் பவித்ராவின் மகள் ரித்திகா (1¼) ஆகியோருடன் வந்துள்ளார். இவர்களில் வேதவல்லி, ரித்திகா ஆகிய இருவரும் பலியானார்கள். லட்சுமணன், சின்னதுரை, திலீப் ஆகிய 3 பேரும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இரண்டு மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிகளும் குடும்பத்துடன் உறவினர்கள் வீட்டு விஷேசத்திற்கு செல்லும் போது விபத்தில் சிக்கி இறந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் கற்க வேண்டிய முக்கியமான பாடம் என்னவென்றால், தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அசுர வேகத்தில் செல்லக்கூடாது.. வேகத்தடை என்பது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கூட தெரியாமல் இருக்கலாம். தினசரி அந்த சாலையில் தனியார் பஸ் ஓட்டுநருக்கு தெரியாமல் போனத வியப்பானதாகும்.

அதேபோல் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும் போது அதில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். இந்த விபத்தில் இரண்டு வாகனத்திலும் சேர்ந்து மொத்தம் 8 பேர் பயணித்துள்ளனர். இதுவும் உயிரிழப்பு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. லாரிக்கு பின்னால், காருக்கு பின்னால், பேருந்துக்கு பின்னால் செல்லும் போது, இருசக்கர வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும்.

ஏனெனில் திடீரென பெரிய பள்ளம் வந்தாலோ, அல்லது வேகத்தடை வந்தாலோ வாகனத்தில் பிரேக் பிடிப்பது கடினமாகிவிடும். அதேபோல் பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் திடீர் பிரேக்கை கவனிக்காமல் மோதும் வாய்ப்பு உள்ளது. இதுவே சேலம் விபத்து உணர்த்தும் பாடமாக உள்ளது. இதனிடையே விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்சின் டிரைவர் சுக்கம்பட்டியை சேர்ந்த ரமேஷ் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+