கொடுத்த கடனை யாரும் திருப்பி தராததால்.. சேலத்தில் ஒரே குடும்பத்தினர் 3 பேர் தற்கொலை
Recommended Video

சேலம்: சேலம் அருகே கொடுத்த கடனை யாரும் திருப்பி தராததால் வறுமைக்கு தள்ளப்பட்ட ஒருவர், விரக்தி அடைந்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கருங்கல் பட்டி பகுதியில் சிவராமன் என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசிந்து வந்துள்ளார்.

இவர் தன்னிடம் இருந்த பணத்தை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் வட்டிக்கு கொடுத்துள்ளார். அந்த வட்டிப்பணத்தில் தான் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடன் வாங்கிய யாரும் கொடுத்த பணத்தை திருப்பி தராமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் சிவராமனின் குடும்பம் வறுமையில் வாடியது. யாரும் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்க மறுக்கிறார்களே என்று சிவராமன் விரக்தி அடைந்துள்ளார். வறுமை நிலையை எண்ணி வேதனை அடைந்த சிவராமன் தனது குடும்பத்தோடு நேற்ற இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் சிவராமன் உள்ளிட்ட 3 பேரின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ளவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் விவகாரத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications