இந்து தர்மத்தை விமர்சிக்கும் இந்தியா கூட்டணி வேறு மதத்தை பற்றி விமர்சிப்பது இல்லை.. பிரதமர் மோடி
சேலம்: இந்து தர்மத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி செயல்படுகிறது. இந்து மதத்தை பற்றி விமர்சிக்கும் இந்தியா கூட்டணி வேறு மதத்தையோ, மற்ற மதத்தையோ பற்றி விமர்சித்து பேசுவதே இல்லை என்று சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் இன்று பாஜக பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று 1 மணியளவில் கலந்துகொண்டார். அப்போது பிரதமர் மோடி, பேசியதாவது:-

எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கி இருக்கிறது. இந்து தர்மத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி செயல்படுகிறது. மற்ற மதத்தினரை இந்தியா கூட்டணி விமர்சிப்பதே இல்லை. இந்து மதத்தை பற்றி விமர்சிக்கும் இந்தியா கூட்டணி வேறு மதத்தையோ, மற்ற மதத்தையோ பற்றி விமர்சித்து பேசுவதே இல்லை. இந்தியா கூட்டணியினர் செங்கோலை அவமதித்தவர்கள். எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோலை பற்றி தவறாக பேசுகிறார்கள்.
இந்து மதத்தை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்துபோய் இருக்கிறார்கள். இந்து மக்களின் அடையாளத்தை நான் இருக்கும் வரை அழிக்க விடமாட்டேன். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவதே எனது இலக்கு. சுப்பிரமணிய பாரதியார் போல நானும் பெண் சக்திக்காக போராடுவேன். திமுகவும் காங்கிரசும் பெண்களை எப்படியெல்லாம் இழிவுபடுத்தினார்கள் என்று கொஞ்சம் நினைத்து பாருங்கள்.
சட்டசபையில் ஜெயலலிதாவை இழிவுபடுத்தியவர்கள் தான் திமுகவினர். இதற்காக தான் பெண்களுக்கான மகளிர் உரிமை சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் போது அதனை அவர்கள் எதிர்த்தனர். தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கவலை அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. திமுகவும் காங்கிரசும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஊழல் செய்வதையே குறிக்கோளாக கொண்டுள்ளன. ஜிகே மூப்பனாரை பிரதமராக்க விடாமல் தடுத்தனர்.
கொள்ளை அடிப்பதிலேயே திமுக குறியாக இருக்கிறது. மத்திய அரசு அனுப்பும் பணத்தை கொள்ளையடிப்பதையை திமுக குறிக்கோளாக கொண்டுள்ளது. தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பாஜக தொடங்கி வருகிறது. பாஜக கூட்டணியில் புதிதாக இணைந்திருக்கும் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன். உங்கள் ஒவ்வொருவருடைய ஆதரவினால் நம் பாரதம் மேலும் வலுவடையும்.
பாரத அன்னை வாழ்க.. என்னுடைய தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம்.. தமிழகத்தில் பாஜகவும் எனக்கும் கிடைக்கும் வரவேற்பை இந்தியாவே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. பாஜகவுக்கும் என்டிஏ கூட்டணி கட்சிக்கும் கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே போய்விட்டது. தமிழ்நாடு மக்கள் ஒரு முடிவு செய்துவிட்டார்கள். ஏப்ரல் 19 ஆம் தேதி விழுகின்ற ஓட்டு எல்லாம் பாஜகவுக்கு தான்.. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான்..
தமிழக மக்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டனர். தமிழக மக்களின் ஆதரவால் இந்த முறை பாஜக கூட்டணி 400 ஐ தாண்டும். 400 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும். கோட்டை மாரியம்மன் மண்ணிற்கு வந்திருப்பது பெருமையளிக்கிறது. ராமதாஸ், அன்புமணியின் அனுபவம் பாஜகவிற்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக பிரதமர் மோடி பேச ஆரம்பிக்கையில் பாரத் மாதா கி ஜே.. பாரத் மாதா கி ஜே.. என பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பினர்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications