சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மஞ்சுளா நைட்டியுடன் என்ட்ரி.. "ராத்திரியில் கோயில் பின்வாசலில் பெண்கள்".. எகிறும் திமுக கவுன்சிலர்

நைட்டியுடன் கோயிலுக்குள் நுழைந்து, அர்ச்சகரை திமுக பெண் கவுன்சிலர் திட்டியதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சேலம்: கவுன்சிலர் மஞ்சுளா கொடுத்த நெருக்கடியால்தான், சீதா ராமச்சந்திர மூர்த்தி கோவில் அர்ச்சகர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் தற்போது பரவி வரும்நிலையில், அதற்கு சம்பந்தப்பட்ட மஞ்சுளாவே ஒரு நீண்ட நெடிய விளக்கம் தந்துள்ளார்..

Recommended Video

    சேலம்: அர்ச்சகரை ஒருமையில் பேசும் கவுன்சிலர்...வீடியோ வெளியானதால் பரபரப்பு!

    சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணாநகர் பகுதியில் ஸ்ரீ சீதாராமச்சந்திர மூர்த்தி திருக்கோவில் அமைந்துள்ளது.. இந்த கோயில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

    இதில் அர்ச்சகராக பணியாற்றி வருபவர் கண்ணன்.. திமுக கவுன்சிலர் மஞ்சுளா மூலம் பல்வேறு இடையூறுகள் தனக்கு ஏற்படுவதாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.

    நைட்டியுடன் மஞ்சுளா.. கோயிலுக்குள் வந்த திமுக பெண் கவுன்சிலர்.. பதறிய அர்ச்சகர்.. மாலையே பணிநீக்கம்!நைட்டியுடன் மஞ்சுளா.. கோயிலுக்குள் வந்த திமுக பெண் கவுன்சிலர்.. பதறிய அர்ச்சகர்.. மாலையே பணிநீக்கம்!

     நைட்டியுடன் மஞ்சுளா

    நைட்டியுடன் மஞ்சுளா

    அதாவது, இந்த கோயிலில் மேம்பாட்டு பணி நடைபெற்று வருவதை மஞ்சுளா பார்க்க சென்றாராம்.. அப்போது, மஞ்சுளா நைட்டி அணிந்துகொண்டு கோவிலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது... இதை பார்த்ததும் அர்ச்சகர் அதிர்ச்சி அடைந்து கண்டித்துள்ளார்.. அதற்குதான் பெண் கவுன்சிலர் மஞ்சுளா, அர்ச்சகரை ஒருமையில் திட்டிவிட்டாராம்... இது தொடர்பாக கண்ணன், மஞ்சுளா மீது புகார் கூறி வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.

     கவுன்சிலர் மஞ்சுளா

    கவுன்சிலர் மஞ்சுளா

    "கவுன்சிலர் மஞ்சுளாவால், கோவிலுக்கு இடையூறு ஏற்படுகிறது... மணி அடிக்கக் கூடாது, பூஜை செய்யக்கூடாது என்பதோடு, அடியாட்களை வைத்து மிரட்டுகிறார்... செயல் அலுவலரிடம் பொய் புகார் கொடுத்து வெளியேற்றி, சாவியை வாங்க பிரச்சினை செய்கிறார்.. இதை வீடியோ வாயிலாக மக்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். என் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.,. இதுக்கு கவுன்சிலர் மஞ்சுளாதான் பொறுப்பு.. கலெக்டர், அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

     மஞ்சுளா வீடியோ

    மஞ்சுளா வீடியோ

    மற்றொருபுறம், அர்ச்சகர் கண்ணனிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணைக்கும்போது, திமுக கவுன்சிலர் மஞ்சுளா ஒருமையில் பேசுவது போன்ற வீடியோக்களும் வெளியாகி இருந்தன.. அந்த வீடியோவில், அங்கிருந்த பெண்கள், அர்ச்சகருக்கு மரியாதை தருமாறு சொல்லியும், மஞ்சுளா, அர்ச்சகரை ஒருமையில் பேசி உள்ளதாக தெரிகிறது. வீடியோ வெளியிட்ட அன்று சாயங்காலமே, அர்ச்சகர் கண்ணன், கோவிலில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு, புதிய அர்ச்சகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

     பெண்கள் புகார்

    பெண்கள் புகார்

    இதுகுறித்து, கண்ணன் சொல்லும்போது, கவுன்சிலரின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என்று சொல்லி என் மீது புகார் தந்திருக்கிறார்கள்.. அதுவும், ஒரு பெண்ணின் கையை பிடித்து நான் இழுத்ததாக, கவுன்சிலர் தூண்டுதலில் புகார் தரப்பட்டுள்ளது.. இது குறித்து விசாரிக்காமல் இருக்க, செயல் அலுவலர் புனிதராஜுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது... கவுன்சிலரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளை மட்டும் எடுத்துக் கொண்டு, செயல் அலுவலர் என் மீது நடவடிக்கை எடுத்துவிட்டார்... எந்த காரணமுமின்றி, விசாரணை நடத்தாமல் கோவிலை விட்டு வெளியேற்றப்பட்டேன் என்று கண்ணன் கலங்கி சொல்கிறார்.

    விசாரணை

    விசாரணை

    அர்ச்சகர் நீக்கம் குறித்து, செயல் அலுவலர் புனிதராஜ் சொல்லும்போது, "சேலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கவுன்சிலர் மஞ்சுளா புகார் தந்திருந்ததன் அடிப்படையில் விசாரணை நடத்தினேன்.. அதில், கோவிலை பராமரிக்காதது, காலம் கடந்து நடை திறந்தது, சில பெண் பக்தர்களிடம் தவறாக நடந்ததாக கிடைத்த தகவல்படி அர்ச்சகர் கண்ணன் நீக்கப்பட்டார்.. மற்றபடி யாரும் நெருக்கடி தரவில்லை.. உரிய முறையில் விசாரித்துதான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்றார்.

    விளக்கம்

    விளக்கம்

    கவுன்சிலர் மஞ்சுளா கொடுத்த நெருக்கடியால்தான், சீதா ராமச்சந்திர மூர்த்தி கோவில் அர்ச்சகர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் தற்போது பரவி வரும்நிலையில், அதற்கு சம்பந்தப்பட்ட மஞ்சுளாவே ஒரு நீண்ட நெடிய விளக்கம் தந்துள்ளார்..

     கோயில் மணி

    கோயில் மணி

    "அர்ச்சகர் கண்ணன், நைட் 12:00 மணிக்கு மேல் வரை கோவில் நடையை திறந்து வைத்திருந்தார்.. நைட் 10:30 மணிக்கு மேல் மணி அடிக்கிறார்... இதனால் படிக்கிற பிள்ளைகள் பாதிக்கப்படுவதாக மக்கள் புகார் சொன்னார்கள்.. அதனால்தான், கவுன்சிலர் என்ற முறையில் மணி அடிக்க வேண்டாம் என்று சொன்னேன்.. அடியாட்களை வைத்து மிரட்டுவதாக சொல்வதெல்லாம் பொய்.. நைட் நேரத்தில் கோயிலின் பின்பக்கமாக பெண்கள் வந்து போகிறார்கள்..

    பரபரப்பு

    பரபரப்பு

    கோயிலுக்கு சொந்தமான 70 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தார் கண்ணன்.. இந்த அரிசியில் தான் பக்தர்களுக்கு பொங்கல் செய்து தந்துள்ளார்.. கோயில் மண்டபத்தில் நிறைய பணத்தை ரசீது இல்லாமல் வாங்கியிருக்கிறார்.. அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுத்தது அறநிலையத் துறை அதிகாரிகள் தான்... அவரை நீக்கியதால் என் மீது பொய் புகார் சொல்கிறார்" என்றார். அர்ச்சகர் கண்ணனும், கவுன்சிலர் மஞ்சுளாவும் தொடர்ந்து மாறி மாறி குற்றச்சாட்டுகளை சொல்லிவரும் நிலையில், சேலம் மாவட்டமே பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது..!

    English summary
    Is the Salem DMK councilor Manjula responsible for the removal of the temple priest
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X