படமெடுத்த சாதி.. பெரியார் பல்கலைக்கழகம் காவிமயமாகி வருகிறது.. கி வீரமணிக்கு வந்ததே கோபம்! எச்சரிக்கை
சேலம்: பெரியார் பல்கலைக்கழகம் காவிமயமாகிக் கொண்டிருக்கிறது. இதை தடுக்க வேண்டும், என்று கி வீரமணி குறிப்பிட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாள் தமிழ்நாடு முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதில் சாதிய ரீதியாக கேட்கப்பட்ட கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது.
முதுகலை வரலாறு 2ம் ஆண்டு தேர்வுக்கான வினாத்தாள்தான் தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் எது தாழ்த்தப்பட்ட சாதி என்று 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்டு உள்ளது.

வினாத்தாள்
இந்த கேள்விக்கு பலரும் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். இது குறித்து விளக்கம் அளித்த பல்கலைக்கழக முதல்வர், வினாத்தாள் குறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். வெளிக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர் மூலம் உருவாக்கப்பட்ட வினாத்தாள் ஆகும் இது. வினாத்தாள் கசிய கூடாது என்பதால் அதை படிக்கும் வழக்கம் இல்லை. இதனால் தவறு நேர்ந்துவிட்டது.

நடவடிக்கை
விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த வினாவிற்கு காரணமானவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உயர் கல்வித்துறை இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் போராடுவோம்.

திக
திராவிடர் கழகம் சார்பாக போராட்டம் நடத்தப்படும். இதற்கு காரணமான நபர்கள் மீது உயர் கல்வித்துறை அமைச்சகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி பெரியார் பல்கலையில் தலை தூக்க தொடங்கி உள்ளது. அங்கு சாதி வன்மம் படமெடுத்து ஆடிக்கொண்டு இருக்கிறது. பெரியார் பல்கலைக்கழகம் காவிமயமாகிக் கொண்டிருக்கிறது. இதை தடுக்க வேண்டும், என்று கி வீரமணி குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
முன்னதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வைத்த குற்றச்சாட்டில், மக்களே பாரீர், 'பெரியாரின்' பெயரை தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்திலேயே மாணவர்களிடத்தில்,
பெரியாரின் கொள்கைகளை கொச்சைப்படுத்தியும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்தும் செமஸ்டர்தேர்வு வினாத்தாளில் கேள்விகள் கேட்டிருப்பதுதான் விடியா அரசின் திராவிட மாடலா? இதுதான் திமுகவின் சமூகநீதியா?, என்று கேள்வி எழுப்பி இருந்தார்.












Click it and Unblock the Notifications