2021 போல 2024ல் விரட்டி அடிப்போம்.. லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும்.. உதயநிதி
சேலம்: 2021 ஆம் ஆண்டு எப்படி தமிழ்நாட்டில் அடிமைகளை விரட்டி அடித்தோமோ, அதுபோன்று 2024 ஆம் ஆண்டு அடிமைகளின் எஜமானர்களை வீட்டிற்கு விரட்டி அடிப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பூத் கமிட்டி அமைப்பு, செயல் வீரர்களை உற்சாகப்படுத்துவது என பல பணிகளை செய்து வருகின்றனர். மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சேலம் மாநகர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் சேலம் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி மாற்றத்தை கொண்டு வருவேன் என்று கூறி, இந்தியா என்ற பெயரை மட்டும் மாற்றி பாரதம் என்று கொண்டு வந்துள்ளார்.
திமுக இளைஞரணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும். அதற்கு அடித்தளமாக அமைந்திருப்பது இளைஞர் அணி தான். தலைமை சொல்வதை செய்து காட்டுவது தான் செயல்வீரர்கள். எனவே இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக அமைத்துத் தருவது உங்கள் கையில் தான் உள்ளது என்றார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற்றது. மாநாடு எப்படி நடக்க கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டான மாநாடாக அமைந்திருந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகளும், தலைவர்கள் சிறப்பாக செயல்படுவது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
ஆனால் திமுக இளைஞரணி மாநாட்டில் திமுக கொள்கைகள் மற்றும் அதன் வரலாறு கூறப்படும். குறிப்பாக திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொல்லியது, சொல்லாததையும் செய்து காட்டியுள்ளது. அதுகுறித்து விளக்கப்படும். இதுக்கு முன்பாக பாஜக 9 ஆண்டுகள் ஆட்சியில் 2023க்குள் இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்குவேன் என்று பிரதமர் பொறுப்பேற்றார். ஆனால் மீண்டும் தற்பொழுது தேர்தல் வந்துள்ள நிலையில் 2040குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவேன் என்று கூறுகிறார்.
முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரைக்கும் நீட் தேர்வு தமிழ்நாட்டுக்குள் நுழையவில்லை. ஆனால் அவர்கள் இறந்த பிறகு பாஜக அடிமைகள் விட்டுக் கொடுத்துவிட்டனர். இதனால் நீட் தேர்வால் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 30 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள கையெழுத்துகளை பெற்று திமுக இளைஞர் அணி மாநாட்டில் தமிழக முதல்வரிடம் கையில் ஒப்படைப்போம்.
2021 ஆம் ஆண்டு எப்படி தமிழ்நாட்டில் அடிமைகளை விரட்டி அடித்தோமோ, அதுபோன்று 2024 ஆம் ஆண்டு அடிமைகளின் எஜமானர்களே வீட்டிற்கு விரட்டி அடிப்போம் என்றும் கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications