அடங்காத கலா.. சொல்ல சொல்ல கேட்காமல் கள்ளக்காதல்.. பிளேடுகளால் கீறி.. கை, காலை முறித்த உறவினர்கள்
மேட்டூர் அருகே பெண் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்
சேலம்: கலாவை காட்டுக்குள் நிர்வாணப்படுத்தி... உடல்முழுவதும் பிளேடுகளால் கீறி.. கை, கால்களையும் முறித்து தூக்கி வீசிவிட்டு சென்றனர் உறவினர்கள்.. காரணம் நாசமா போன கள்ளக்காதல்!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பாலமலை கெம்மம்பட்டி என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வரும் தம்பதி சின்னகுள்ளன்-கலா.. இவர்களுக்கு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கலாவுக்கு, சின்னசாமி என்பவருடன் கள்ளக்காதல் வந்துவிட்டது.. விஷயம் தெரிந்து சின்னகுள்ளன் கொதித்துவிட்டார்... மனைவியை கண்டித்தார்.. மாமியார் வீட்டிலும் எல்லோருமே கலாவை கண்டித்தனர்.

கலா
இது எதையுமே கள்ளஜோடி கண்டுகொள்ளாமல், தொடர்ந்து உறவை நீட்டித்து வந்தனர். பிறகு விஷயம் ஊர் பஞ்சாயத்துக்கு வந்தது. அங்கு கலாவை எல்லோருமே சேர்ந்து கள்ளக்காதல் கூடாது என்று எச்சரித்தனர்.. அப்போதும் கலா கேட்கவில்லை.. விறகு வெட்டி வருகிறேன் என்று சொல்லி திரும்பவும் சின்னசாமியை யாருக்கும் தெரியாமல் சந்தித்து விட்டு வந்ததாக தெரிகிறது.

காட்டுப் பகுதி
இதனால் ஆத்திரமடைந்த கணவரும், உறவினர்களும், அதே காட்டு பகுதிக்கு கலாவை அழைத்து சென்றனர்.. ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தினர்.. வெற்று உடம்பில் பல இடங்களில் பிளேடால் கிழித்தனர்.. இடது கையையும், வலது காலையும் முறித்து தூக்கி வீசிவிட்டு சென்றனர்.

சிகிச்சை
மறுநாள் விடிந்தபிறகுதான் அந்த பக்கம் போனவர்கள் குத்துயிரும் குலையிருமாக கிடந்த கலாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆபத்தான முறையில் கலா சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கை, மற்றும் கால்களில் மாவுக்கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

பிள்ளைகள்
நடந்த சம்பவம் குறித்து போலீசில் தெரிவிக்கப்பட்டது.. கலாவை கொலை செய்ய முயன்றதாக கணவனின் உறவினர்கள் செல்லப்பன், குமார், ரவி ஆகியோரை கைது செய்தனர்... அப்போது, "வயசுக்கு வந்த பிள்ளைங்க வீட்டில் இருக்கும்போது, இந்த மாதிரி முறை தவறி நடந்ததால்தான் அடித்தோம் என்றும், கலாவுக்கு உயிர் போயிடுச்சுன்னு நினைச்சுதான் காட்டுக்குள்ளேயே வீசிவிட்டு வந்தோம் என்றும் வாக்குமூலம் தந்தனர்.

அதிர்ச்சி
இதையடுத்துதான், கணவன் சின்னகுள்ளனிடம் விசாரிக்க போலீசார் அவரது வீட்டுக்குள் நுழைந்தால், அவர் சாயராயம் காய்ச்சி கொண்டிருந்தார்.. இதையடுத்து அப்போதே, அங்கேயே சின்னகுள்ளனையும் கைது செய்தனர்.. இந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications