வளர்ப்பு நாய் கடித்தாலும் கவனம் மக்களே.. சேலத்தில் ஓராண்டு கழித்து ரேபிஸ் தாக்கி உயிரிழந்த தொழிலாளி
சேலம்: சேலம் மாவட்டம் (Salem - dog) ஆத்தூர் அருகே வளர்ப்பு நாய் கடித்ததில் அதற்கு சிகிச்சை பெறாமல் இருந்த நபர் திடீரென உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெரு நாய்களால் அவ்வப்போது பலர் கடிபட்டு பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வளர்ப்பு நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் தர்மன். அப்பகுதியில் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவரது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்துள்ளார். இந்த வளர்ப்பு நாயானது கடந்த ஆண்டு இவரை கடித்துள்ளது. இதற்கு அப்போது சிறிய சிகிச்சை மட்டுமே எடுத்துக்கொண்டு காயம் ஆறியதும் அப்படியே விட்டுள்ளார்.

அதன்பிறகு அவர் வேலைக்கு சென்று வழக்கமான முறையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து உடல் நிலை சரியில்லாமல் போனதால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இங்கு மேல் சிகிச்சை செய்ய முடியாது எனவும், உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரை செய்தனர்.
அதன்படி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தர்மன் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சை பலனின்றி தர்மன் உயிரிழந்தார். இதைப் பார்த்து அவரது தாய் கண்ணீர் மல்க கதறி அழுதார். இது பற்றி அவரது தாய் கூறுகையில், "நாய் கடித்து அதற்கு சரியான சிகிச்சை பெறாததால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாக" கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications