மேட்டூர் அணை செப்.1ல் திறப்பு.. நீர் இருப்பை பொறுத்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு முடிவு
சென்னை: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர் கோரிக்கை வைத்த நிலையில், வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அணையின் நீர் இருப்பை பொறுத்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12 ஆம் தேதி குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தொடர்ந்து ஜனவரி மாதம் 28ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும். அணையின் நீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போது மின் உற்பத்தியும் நடைபெறும். அணையின் நீர் இருப்பை பொறுத்து குறிப்பிட்ட நாளான ஜூன் 12 ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்போ, பின்போ தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டில் காவிரியில் கர்நாடக அரசு உரிய நீர் திறக்க மறுத்ததால் மேட்டூர் அணையில் நீர் திறப்பு தாமதம் ஆனது. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது.
டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பை பொறுத்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
மேட்டூர் அணையின் 93 ஆண்டு கால வரலாற்றில் குறிப்பிட்ட நாளான ஜூன் 12 ஆம் தேதி 20 முறையும், அணையில் போதிய தண்ணீர் இருந்ததால் ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்னதாக 11 முறையும், போதிய தண்ணீர் இல்லாததால் காலதாமதமாக 61 முறையும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தற்போது 62-வது முறையாக டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் கால தாமதமாக திறந்து விடப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications
