காவிரி பொங்கி வருது.. மேட்டூர் அணையில் குறையாமல் பெருகும் நீர்மட்டம்! டெல்டா விவசாயிகள் செம குஷி!
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 230 நாட்களாக 100 அடிக்கு குறையாமல் இருப்பதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு வழக்கம்போல் ஜூன் 12 ஆம் தேதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரியில் தொடர்ந்து அதிகளவில் நீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.16 அடியாக உயர்ந்துள்ளது. 120 கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் தற்போது 114.16 அடி நீர் உள்ளது.

காவிரி ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,980 கன அடியாகவும், மேட்டூர் அணையின் நீர் இருப்பு 84.46 டிஎம்சியாகவும் உள்ளது.
கடந்த 230 நாட்களாக 100 அடிக்கும் குறையாமல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதால் திட்டமிட்டபடி ஜூன் 12 ஆம் தேதி நீர் திறக்கப்பட உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீரை ஜூன் 12 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
மேட்டூர் அணையில் நீர் இருப்பு மிகவும் திருப்திகரமாக இருப்பதால் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணை நீர்திறப்பு மூலம் டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத் துக்கு ஜுன் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்க இருப்பதையொட்டி, மேட்டூர் அணையில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் அவ்வப்போது நேரில் பார்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
டெல்டா மாவட்டங் களின் வாழ்வாதாரமாக அமைந்துள்ள மேட்டூர் அணை ரூ 20 கோடி ரூபாய் செலவில் பரா மரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறன. அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் மதகு, ஆய்வு சுரங்கம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சிறுசிறு சேதங்களை சரிசெய்யும் பணியுடன், அணை பராமரிப்பு, புனரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications