மேட்டூர் அணை நாளை திறப்பு.. விஜய் திறந்து வைக்கிறார்.. 45 நாட்களுக்கு நீர்
சேலம்: காவிரி நீர் விவகாரம் பெரும் பிரச்சனையாக உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகா அரசு கூறியது. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறக்கப்படவுள்ளது. முதலமைச்சர் விஜய் மேட்டூர் சென்று திறந்து வைக்கவுள்ளார். இதற்காக நீர்வளத்துறை அதிகாரிகள் மேட்டூர் அணையில் முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள். இந்த பணிகளை நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.
காவிரி நீர் விவகாரத்தில் தமிழகம், கர்நாடகா இடையே தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. மேகதாது விவகாரம், காவிரி நீர் விவகாரம் இந்தாண்டும் பிரச்சனையானது. இரண்டு மாநிலங்களிலும் போராட்டம் வெடித்தது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று என்று தமிழ்நாடு அரசும், தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகா அரசும் கூறின. தமிழகத்திற்கு 9,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியம் கூறியது.

மேட்டூர் அணை நாளை திறப்பு
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் மேட்டூர் அணை திறக்கப்படும். கர்நாடகா தண்ணீர் கொடுக்காததால் இந்தாண்டு மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. மேட்டூர் அணையின் மூலம் காவிரி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களை சேர்ந்த 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
குறுவை, சம்பா, தாளடி முப்போக சாகுபடிக்கு ஜூன் முதல் ஜனவரி வரை தண்ணீர் திறக்கப்படும். இப்போதுவரை மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா அரசு நீர் திறக்காவிடினும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.5 அடியாக உள்ளது.
விஜய் பங்கேற்பு
விநாடிக்கு 9,035 கனஅடி நீர் அணைக்கு வருகிறது. அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இதனால் அடுத்த 3 மாதங்கள் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. இதையடுத்து நாளை (செப்டம்பர் 1) முதல் 45 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை நீர்வளத்துறை, சேலம் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. அணையின் வலது கரையில் விழா மேடை அமைக்கப்படவுள்ளது. நீர்வளத்துறை செயலாளர்
பிரசாந்த் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். முதலமைச்சரான பிறகு முதல்முறையாக விஜய் சேலம் செல்லவுள்ளார். இதனால் பாதுகாப்பு வசதி பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
