Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்சிக்கு வந்தும் ஒண்ணும் செய்ய முடியலையே.. ரொம்ப சங்கடம்.. ஆதங்கத்துடன் பேசிய அமைச்சர் கேஎன் நேரு!

Subscribe to Oneindia Tamil

சேலம் : ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் திமுக தொண்டர்களுக்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என அமைச்சர் கேஎன் நேரு ஆதங்கத்துடன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கேஎன் நேரு, "10 ஆண்டு காலம் திமுக ஆட்சியில் இல்லாதபோது எதையும் எதிர்பார்க்காமல் தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர். முக ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்று தொண்டர்களின் உழைப்பு என்பது மிகவும் அபாரமானது.

minister kn nehru consoles dmk cadres in meeting

தொண்டர்களின் உழைப்பு காரணமாக தற்போது ஆட்சிக்கு வந்தபோதிலும் ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் தொண்டர்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. செய்ய விருப்பம் இல்லாமல் இல்லை, செய்ய இயலவில்லை என்பதே உண்மை. எங்களுக்கு எந்த விதமான சொந்த ஆசையும் இல்லை.

தொண்டர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே ஆசை, ஆனால் அந்த ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத சங்கடமான நிலையில் தான் இருக்கிறோம். அந்தச் சங்கடம் முதல்வர் ஸ்டாலினுக்கும் இருக்கிறது. தொண்டர்களின் விருப்பத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

minister kn nehru consoles dmk cadres in meeting

முதல்வர் ஸ்டாலினும் தொண்டர்களின் மனநிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். கருணாநிதி எப்படியோ, அதேபோல ஸ்டாலினும் நினைக்கிறார். நம் தொண்டர்கள் நலமாக இருக்க வேண்டும் என்பதில் இந்த தலைவர்களை போல் வேறு எந்த தலைவரையும் பார்க்க முடியாது.

திமுகவினர் யார் யாருக்கு தகுதி இருக்கிறதோ அவர்களுக்கு நிச்சயம் அரசு பணி கிடைக்க நான் உறுதியாக இருப்பேன்" என்று அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார். அவரது இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+