ஏகப்பட்ட ஆண்களுடன் தொடர்பு.. இடையூறாக இருந்த மகள்.. மகளை கிணற்றில் தள்ளி கொன்ற தாய்
கள்ளக்காதல் காரணமாக 5 வயது மகளை கொன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம்: இதோ இன்னொரு அபிராமி... கள்ளக்காதலுக்காக 5 வயது மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு இப்போது கேவலப்பட்டு கொண்டுள்ளார்.
சேலம் மாவட்டம் வீரகனுர் அருகே இலுப்புனத்தம் என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வரும் தம்பதிதான் சிவசங்கர், பிரியங்கா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அவள் பெயர் ஷிவானி!
இந்நிலையில் நேற்று முன்தினம், அந்த பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் ஓடிப்போய் பார்த்தனர். அப்போது, கிணற்றில் பிரியங்காவும், ஷிவானியும் இருந்தனர்.

மர்மநபர்கள்
உடனடியாக அங்கிருந்த சிலர் கிணற்றில் குதித்து தத்தளித்துகொண்டு இருந்த பிரியங்காவை காப்பாற்றினார்கள். ஆனால் ஷிவானியை பிணமாகத்தான் மீட்டனர். இந்தவிஷயம் தொடர்பாக போலீசார் விசாரணை ஆரம்பித்தார்கள். அப்போது, தன்னிடம் பணம், நகைகளை கொள்ளை அடிக்கவே மர்மநபர்கள் வந்ததாகவும், அப்போது எங்கள் இருவரையும் கிணற்றில் தள்ளிவிட்டு சென்றதாகவும் பிரியங்கா போலீசாரிடம் கூறினார்.

நகை, பணம்
இந்த பதிலை கேட்டதும் போலீசாருக்கு சந்தேகம் பிரியங்காமீதுதான் விழுந்தது. ஏனெனில் அந்த இடத்தில் ஜன நடமாட்டம் அதிகமாக இருக்குமாம். அதுவும் இல்லாமல் பிரியங்காவிடம் நகை, பணம் எதுவும் கொள்ளை போகவும் இல்லை. வழிப்பறி செய்ததற்கான அடையாளமும் இல்லை. இதனால் போலீசார் விசாரணையை பிரியங்காவிடமே மீண்டும் பலமாக ஆரம்பித்தனர்.

நிறைய ஆண்கள்
அப்போதுதான் எல்லா விஷயமும் வெளியே வந்தது. அப்போது பிரியங்கா சொன்னதாவது: "கணவர் சிவசங்கர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். குழந்தையுடன் நான் தனியா இருக்கேன். எனக்கு நிறைய ஆண்களுடன் தொடர்பு இருக்கு. அதனால அவர்களுடன் அடிக்கடி போனில் பேசிக்கிட்டே இருப்பேன். இந்த விஷயத்தை என் குழந்தை புருஷனிடம் போனில் பேசும்போது சொல்லிட்டாள்.

இடையூறு
அவள் சாதாரணமாக கணவனிடம் சொன்னாலும் எனக்கு குழந்தைமீது ஆத்திரம் வந்தது. என்னுடைய கள்ளக்காதல்களுக்கு இடையூறாக நாளை வந்துவிடுவாள், என் புருஷனிடம் சொல்லிவிடுவாள் என்றுதான் அவளை கொலை செய்ய முடிவு செய்தேன். இரவு நேரத்தில் கிணற்றில் குழந்தையையும் தள்ளி விட்டேன்.

நாடகம் நடத்தினேன்
நான் விடியும்வரை கிணற்று பக்கமே நின்றிருந்தேன். ஜனங்க காலையில நடமாட ஆரம்பிச்சதும், நான் கிணற்றில் இறங்கி தத்தளிப்பதுபோல நடிச்சேன். இதை மறைக்கத்தான் முகமூடி கொள்ளையர்கள் வந்தார்கள் என பொய் சொல்லி நாடகம் நடத்தினேன்" என்றார். இதையடுத்து பிரியங்காவை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications