10 லட்சம் பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன்65, பிரட் அல்வா! ருசி ருசியாய் திமுக இளைஞரணி மாநாடு மெனு
சேலம்: சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டு திடலில் 10 லட்சம் பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பிரட் அல்வா, தயிர் சாதம், ஸ்வீட், காலி பிளவர் சில்லி என ஏராளமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சமையல் கலைஞர்கள் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உணவு சமைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3 லட்சம் பேருக்கு ஒரு டீம் என்று மூன்று டீம்களாக பிரிக்கப்பட்டு பிரியாணி தயாரிக்கப்படுகிறது. அதேபோல் சிக்கன் 65, பிரட் அல்வா ஆகிய இரண்டையும் தயாரிக்க தனி டீம் வேலை பார்த்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் சைவம் சாப்பிடுபவர்களுக்கு வெஜ் பிரியாணி, தயிர் சாதம், காலி பிளவர் சில்லி என எக்கச்சக்க உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன.

வில்லேஜ் குக்கிங் சேனலில் கூறுவதை போல் ''இன்னைக்கு ஒரு புடி'' என்கிற வகையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு அறுசுவை விருந்து காத்திருக்கிறது. நாளை காலை 10 மணிக்கெல்லாம் பிரியாணி தயாராக இருக்க வேண்டும் என திமுக மேலிடம் கேட்டிருப்பதால், இரவு 2 மணி முதல் பிரியாணி சமையல் தொடங்கவுள்ளது. சீரக சம்பா அரிசியில் திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி சமைக்கப்படுகிறது. பிரட் அல்வா ஊற வேண்டும் என்பதால் அந்த உணவுப் பண்டம் மட்டும் இன்று மாலையே சமைத்து ரெடி செய்யப்பட்டுவிட்டது.
மற்றப்படி பிரியாணி, சிக்கன் 65 போன்ற உணவு பண்டங்கள் அதிகாலை முதல் சமைக்கப்படவுள்ளன. காலை 9 மணிக்கெல்லாம் பிரியாணி ரெடி என்று சொல்லும் அளவுக்கு வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதிமுக மாநாட்டில் தொண்டர்களுக்கும் புளிசாதம், தயிர்சாதம் வழங்கப்பட்ட நிலையில் கமகமக்கும் பிரியாணி வழங்குகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
பந்தியில் அமர்ந்து சாப்பிட விரும்புபவர்கள் சாப்பிடலாம் அல்லது பார்சல் வாங்கிச் சென்று சாப்பிட விரும்புபவர்கள் சாப்பிடலாம் என்கிற வகையில் ஏற்பாடுகள் பக்காவாக செய்யப்பட்டுள்ளன. 10 லட்சம் பேருக்கு இவர்கள் சமைத்தாலும் நாளை முகூர்த்த நாள் என்பதால் மாநாடுக்கு வருகை தருவோர் எண்ணிக்கை 5 லட்சம் வரை தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications