ப்ளூ கலரில் நீலமான் பார்த்திருக்கீங்களா? சேலம் குரும்பப்பட்டி பூங்காவில் எப்படி இருக்குன்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சேலம்: நீலமான் என்ற பெயரைக் கேட்டதும், இது நீல நிறத்தில் இருக்குமா என்ற கேள்வி வரலாம்.. வளர்ந்த ஆண் நீலமான்கள் நீலச் சாம்பல் நிறத்தில் இருக்கும். பெண் நீலமான்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை உடல் வலிமை கொண்டவை. வட இந்தியா பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் இந்த நீலமான்களை, இனி தமிழகத்திலேயே நேரில் பார்த்து ரசிக்கலாம்.. ஆமாம்.. சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் புதிய வரவாக வந்துள்ள நீலமான்களையும், வெளிமான்களையும் பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் சேர்வராயன் மலை அடிவாரத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது... இங்கு புலி, சிங்கம், கடமான், முதலை, மலைப்பாம்பு, வண்ண மயில்கள், வெள்ளை மயில் என 300-க்கும் அதிகமான வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

Nilgai Blue Bull

சேலம் உயிரியல் பூங்கா

சேலம் மாவட்ட மக்கள் மட்டுமில்லாமல், சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் நிறைய சுற்றுலா பயணிகள் இந்தப் பூங்காவுக்கு வருகிறார்கள். இயற்கை அழகையும், அங்கு பராமரிக்கப்படும் வனவிலங்குகளையும் பார்த்து ரசித்துவிட்டுச் செல்கிறார்கள்..

இந்நிலையில், பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மேலும் நிறைய விலங்குகளைப் பார்த்து ரசிக்கும் வகையில், பிற உயிரியல் பூங்காக்களில் இருந்து புதிய விலங்குகளைக் கொண்டு வந்து பராமரிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதன்படி, கடந்த ஜனவரி மாத இறுதியில் கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் இருந்து 10 வனவிலங்குகள் குரும்பப்பட்டி பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டன. இதில் 4 நீலமான்கள், அதாவது 2 ஆண் மான்கள், 2 பெண் மான்கள் இடம்பெற்றிருந்தன. அதேபோல், 4 வெளிமான்களில் ஒரு ஆண் மானும், 3 பெண் மான்களும் இருந்தன. இவற்றுடன் ஒரு ஆண், ஒரு பெண் என 2 பொன்னரி குள்ளநரிகளும் கொண்டு வரப்பட்டன.

2 மாதங்கள் சூப்பர் பராமரிப்பு

புதிய இடத்துக்கு வந்தவுடன் இந்த விலங்குகளைப் பார்வையாளர்கள் பார்க்க அனுமதிக்கவில்லை. முதலில் அவை புதிய சூழலுக்கு ஏற்றபடி பழகுகின்றனவா, உணவு சாப்பிடுகின்றனவா, உடல்நிலை சீராக இருக்கிறதா என்பதைக் கண்காணிப்பதில்தான் வனத்துறையினர் கவனம் செலுத்தினார்கள்..

இதற்காகவே 24 மணி நேரமும் டாக்டர்களும், வனத்துறை அதிகாரிகளும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடந்த 2 மாதங்களாக இந்த 10 விலங்குகளுக்கும் தீவிர கண்காணிப்புடன் பராமரிப்பு வழங்கப்பட்டது. தினமும் வன உயிரின மருத்துவக் குழுவினர் நீலமான்கள், வெளிமான்களைப் பரிசோதித்து வந்தனர்.

நல்ல உடல்நிலை

கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா பூங்காவில் இருந்து வந்த இந்த மான்கள், குரும்பப்பட்டி பூங்காவின் பசுமையான நிலப்பரப்பைத் தங்களுடைய புதிய வசிப்பிடமாக ஏற்றுக்கொண்டு உற்சாகமாக இருக்கின்றன. ஏற்கனவே அவை வசித்த பன்னர்கட்டா பூங்காவில் இருந்ததைவிட, குரும்பப்பட்டியில் அதிக பசுமையான சூழல் இருப்பதாகப் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், தீவனத்தட்டு, கோதுமைத் தவிடு, மாட்டுத் தீவனம், முட்டைக்கோஸ், கீரைகளை சாப்பிட்டு ஜம்மென்று உள்ளதாம்.. இதுபோக. தரையில் வளர்ந்துள்ள பசுமையான புற்களையும் இந்த மான்கள் சாப்பிட்டு வருகின்றன... இதனால் அவற்றின் உடல்நிலையும் நல்ல நிலைக்கு மாறியுள்ளது.

சுற்றுலா பயணிகள் ஹேப்பி

2 மாதங்களாக இப்படி கண்ணும் கருத்துமாக கண்காணித்து, புதிய சூழலுக்கு அவை பழகிவிட்டதை உறுதி செய்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.. இப்போது நீலமான்கள், வெளிமான்கள் மற்றும் பொன்னரி குள்ளநரிகளைப் பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதனால் சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவுக்கு வருபவர்கள், இனி இந்தப் புதிய வனவிலங்குகளையும் நேரில் பார்த்து ரசிக்கலாம்.. குறிப்பாக, நீலமான்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும், அவற்றின் தோற்றத்தை நேரில் பார்க்கவும் விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+