சேலம் அருகே அரசு பள்ளியில் வட மாநில ஆசிரியர்கள் நியமனமா? பெற்றோர்கள் அதிர்ச்சி! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் ஓமலூர் அருகே உள்ள அரசு மாதிரிப்பள்ளியில் வடமாநிலத்தை சேர்ந்த 5 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக சர்சை கிளம்பியுள்ளது. ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 5 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானதால், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிக்கனம்பட்டி ஊராட்சி அருகே குப்பூர் என்ற ஊரில் அரசு மாதிரிப்பள்ளி உள்ளது. 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை விடுதி வசதியுடன் செயல்படும் இந்த மாதிரிப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மானவ, மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.

North Indian Teachers states appointed at a government school near Salem parents raise concern

நீட், ஜே.இ.இ பயிற்சி

12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீட், ஜே.இ.இ போன்ற தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளுக்கான கோச்சிங்கும் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பள்ளியில் தங்கள் பிள்ளைகள் சேருவதற்கு பெற்றோர்கள் இடையே பெரும் ஆர்வம் உள்ளது. அண்மையில் நடைபெற்ற நீட் மறு தேர்வில் இந்த மாதிரிப்பள்ளியில் படித்த 5 மாணவ மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு தேர்வாகியிருந்தனர். அரசின் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், மாணவர்களுகு இடம் கிடைத்தது.

வடமாநிலத்தை சேர்ந்த 5 ஆசிரியர்கள் நியமனம்

இந்த பள்ளியில் அளிக்கப்பட்டு வரும் நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வட மாநில ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக சர்சை கிளம்பியுள்ளது. ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 5 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானதால், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழே தெரியாத ஆசிரியர்களால், தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு எப்படி பயிற்றுவிக்க முடியும். இதனால், மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படாதா? என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய சூழலில், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பனிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த கல்வி அலுவலர் கூறியதாவது:-

விளக்கம் கேட்கப்பட்டுள்ளது

குப்பூரில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் வட மாநில ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகனிடம் விசாரணை செய்து வருகிறோம். பள்ளி மேலாண்மை குழு மூலமாக வட மாநில ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறதா? என விளக்கம் கோரப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

சேலத்தில் அரசு மாதிர்ப்பள்ளியில் வட மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக சமூக வலைத்தளங்க்ளிலும் வீடியோக்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே, சென்னையில் போக்குவரத்து கழகத்தில் ஆட்சேர்ப்பு பணிக்கு வட மாநில நிறுவனம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், தற்போது இந்த விவகாரமும் விஜய் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+