தந்தை சொல்மிக்க மந்திரமில்லை! உடல் நலமில்லாத வயதான அப்பா! உணவு ஊட்டி விடும் பாமக எம்.எல்.ஏ. அருள்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: உடல்நலமில்லாத தனது வயதான தந்தைக்கு தினமும் உணவு ஊட்டிவிடும் நெகிழ்ச்சியான காரியத்தை செய்து வருகிறார் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ. அருள்.

சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அருள். இவரது தந்தை ராமதாஸ் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 88 வயதாகும் ராமதாஸ் தற்போது தனது மகன் அருள் எம்.எல்.ஏ.வீட்டில் வசித்து வருகிறார்.

PMK Mla Arul Ramadoss is doing the kind thing of feeding his ailing father every day

அவருக்கு வயது முதிர்வு காரணமாக மறதி உட்பட பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. இதனிடையே அவ்வப்போது சாப்பாடு வேண்டாம் என சாப்பிட மறுக்கும் ராமதாஸ், தனது மகன் அருள் எம்.எல்.ஏ. ஊட்டிவிட்டால் மட்டும் தட்டாமல் சாப்பிட்டுக் கொள்வாராம்.

அந்த வகையில் இன்றும் காலை டிபன் வேண்டாம் என அருள் எம்.எல்.ஏ.வின் தந்தை ராமதாஸ் அடம் பிடித்திருக்கிறார். குடும்பத்தினர் எவ்வளவோ சமாதானம் செய்து அவரை சாப்பிட வைக்கமுடியவில்லை. இதையடுத்து தனது பரபரப்பான பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு தனது கையாலேயே தந்தைக்கு உணவு ஊட்டிவிட்டு நெகிழ வைத்துள்ளார் அருள் எம்.எல்.ஏ.

PMK Mla Arul Ramadoss is doing the kind thing of feeding his ailing father every day

தாயிற் சிறந்த கோவிலுமில்லை; தந்தை சொல்மிக்க மந்திரமில்லை; அன்னை தந்தையே அன்பின் எல்லை என சும்மாவா சொன்னார்கள். இதனிடையே இது குறித்து அருள் எம்.எல்.ஏ.விடம் நாம் பேசிய போது, ''அப்பா, அம்மா இருவரும் ஓய்பெற்ற ஆசிரியர்கள். என்னுடன் தான் அவர்கள் இருக்கிறார்கள்.''

''வயது முதிர்வால் வரும் வயிறு பிரச்சனைகளால் அப்பாவால் அவ்வப்போது சாப்பிடமுடியாது. அந்த நேரத்தில் அவருக்கு நான் தான் ஊட்டி விடுவேன். அவரும் பிரியமாக சாப்பிட்டுக் கொள்வார் எனக் கூறி நெகிழ வைத்தார்.''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+