சேலம் ஆத்தூரில் மனைவியை மாற்றிக் கொள்ளும் நண்பர்கள்.. கணவன் கண் முன்னே.. அதிர்ந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க மனைவியை வற்புறுத்திய கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் பல்வேறு வில்லங்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. மனைவியை மாற்றிக்கொள்ளும் அவர் மற்றும் அவரது நண்பர்கள் குறித்து போலீசார் கூறிய பல்வேறு தகல்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி உயிரையே மாய்த்துக் கொள்ள முயன்றார். இதன் காரணமாக ஆத்தூர் அரசு மருத்துவமளையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் இருந்து வந்த தகவலை அடுத்து மகளிர் போலீசார் நேரில் வந்து விசாரித்தனர். அதனபின்னர் அவர் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் அந்த கணவர் குறித்து திடுக்கிடும் புகார்களை கூறியுள்ளார்.

அந்த பெண் கூறுகையில், என் பெயர் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), சேலம் உடையாப்பட்டியில் வசிக்கும் தனியார் பால் கம்பெனியில் காவலாளியாக பணிபுரியும் 24 வயது நபருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம்.

Police received information about friends swapping wives in Salem Attur

நாங்கள் இருவரும் தனிமையில் சந்தோஷமாக இருக்கும் போது அதனை போட்டோ மற்றும் வீடியோவாக எனது கணவர் அவரது செல்போனில் படம் பிடித்து வைத்தார். பின்னர் அந்த வீடியோ காட்சிகளை எனது கணவர் அவரது நண்பர்களுக்கு அனுப்பினார். அதன்பின்னர் அவருடன் வேலை பார்க்கும் 2 நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்து அவரின் கண்முன்னால் அவர்களுடன் உல்லாசமாக இருக்குமாறு என்னை வற்புறுத்தினார். நான் மறுத்ததால் என்னை அடித்து உதைத்து சித்ரவதையும் செய்தார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி ஆடிப்பண்டிகையையொட்டி எனது தாய் வீடான ஆத்தூர் முல்லைவாடிக்கு வந்து சேர்ந்தேன்.

அங்கும் வந்த எனது கணவர் எனது நிர்வாண நிலையில் உள்ள போட்டோ, வீடியோ ஆகியவற்றைக் காட்டி இதை சமூக வலைத்தளங்களில் வெளியிட போவதாக என்னை மிரட்டினார். இதனால் அவரிடம் நான் கடுமையாக வாக்குவாதம் செய்தேன். பின்னர் அவர் என்னிடம் தகராறு செய்துவிட்டு அங்கிருந்து போய்விட்டார்.இதனால் மனம் உடைந்து நான் உயிரைரைவிட முயற்சி செய்தேன். இவ்வாறு அந்த பெண் புகாரில் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி, அந்த இளம்பெண்ணின் கணவர், அவரது நண்பரான ராசிபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் என 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தார். அவர்களிடம் விசாரணை தொடர்ந்த நடந்து வருகிறது.

அதே நேரத்தில் மீனாவின் கணவர், ஆத்தூர் டவுன் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் எனது மனைவியை நான் பார்க்க சென்றபோது என்னை, எனது மாமனார், அவரது உறவினர்கள் 3 பேர் சேர்ந்து தாக்கினார்கள் என்று கூறினார்.

அதன்பேரில் அந்த இளம்பெண்ணின் தந்தை உள்பட உறவினர்கள் 3 பேர் மீது ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திருமணம் செய்த 4 மாதங்களில் மனைவியை ஆபாச வீடியோ எடுத்து நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்திய கணவர் நண்பருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலம் ஆத்தூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+