சேலத்தில் ஒரு "பொள்ளாச்சி".. காதலர்களை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டி கூட்டு பலாத்காரம்.. 4 பேர் கைது
சேலம்: சேலத்தில் காதலர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சியில் கும்பல் ஒன்று கல்லூரி மாணவிகளை குறிவைத்து ஆசை வார்த்தைகள் பேசி காதல் வலையில் விழவைத்தனர். பின்னர் அவர்களை தனிமையான இடத்துக்கு அழைத்து சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டினர்.
அந்த வீடியோவை வைத்து பெண்களை மீண்டும் பணிய வைப்பதும் பணம் பறிப்பதுமாக இருந்தனர். இதையடுத்து ஒரு பெண்ணின் புகாரின் பேரில் திருநாவுக்கரசு உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் திமுக, காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களிடம் விசாரணை நடைபெற்றது.

காதலர்களை குறி வைத்து
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை போல் சேலத்திலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. சேலத்தில் 4 பேர் கொண்ட கும்பல் இது போல் காதலர்களை குறி வைத்தது தெரியவந்தது.

போலீஸார் விசாரணை
இதுதொடர்பாக மோகன் சுந்தர் என்பவரின் புகாரின் பேரில் மணிகண்டன் (31), சுபாஷ் (27), இளங்கோவன் (28), தினேஷ் (26) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

காதல் ஜோடிகள்
அப்போது அவர்கள் கூறுகையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு வரும் காதலர்களை குறி வைப்போம். அவர்கள் செய்யும் சில்மிஷங்களை செல்போனில் படம் எடுப்போம்.

பலாத்காரம் செய்வோம்
பின்னர் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்வோம். அந்த காதலனிடம் இருந்து பணம், நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டு விரட்டி விடுவோம். இது மட்டுமல்லாது சேலம் பட்டர் பிளை பாலத்திற்கு அடியில் அமர்ந்து கொண்டு அவ்வழியே தனியாக செல்லும் பெண்களையும் மடக்கி பலாத்காரம் செய்வோம்.

வழிப்பறி செய்வோம்
பின்னர் அவர்களிடம் பணம் பறிப்போம். அவ்வழியாக வரும் ஆண்களிடம் செல்போன், நகை, பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்வோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 44 சவரன் நகை, செல்போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications