சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏன் மாற்றப்பட்டார் கலெக்டர் ரோகிணி.. இதுதான் காரணமா?.. பரபரக்கும் பின்னணி

கலெக்டர் ரோகிணி மாற்றம் செய்யப்பட என்ன காரணம் என உறுதியாக தெரியவில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    Collector Rohini: கலெக்டர் ரோகிணி இதற்காகத்தான் மாற்றப்பட்டாரா?- வீடியோ

    சேலம்: கலெக்டர் ரோகிணி எதற்காக திடீரென மாற்றப்பட்டார் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    171வது கலெக்டராக பதவியேற்றது முதல் சேலம் மாவட்ட மக்களின் அன்பை பெற்றார் ரோகிணி. "சின்ன வயசு பெண்.. பம்பரம் மாதிரி சுழன்று வேலை பார்க்கிறாரே.. மக்கள் கோரிக்கைகளை உட்கார்ந்து பொறுமையுடன் கவனிக்கிறாரே" என்று பலரால் பேசப்பட்டது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தருவது, விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது, பள்ளி மாணவர்களுடன் நெருக்கம் ஏற்படுத்தி கொள்வது என மக்கள் மனதில் எளிதாக நுழைந்தார் ரோகிணி.

    உழைக்க வந்த உழைக்க வந்த "தங்கமா".. இல்லை பிழைக்க வந்த "பித்தளையா".. போட்டு தாக்கும் தமிழிசை

    மீம்ஸ்கள்

    மீம்ஸ்கள்

    ஆனால் இவ்வளவும் கேலிகளாகவும், கிண்டல்களாகவும், மீம்ஸ்களாகவும் உலா வந்ததை யாருமே கண்டிக்காததும், எதிர்க்காததும் பெரிய அதிர்ச்சிதான். இப்படிப்பட்ட சூழலில்தான் ரோகிணி மாற்றம் என்ற செய்தி வந்தது. என்ன காரணம் என்று உறுதியாக தெரியாவிட்டாலும், எப்படியோ இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கும் என்று மட்டும் கிசுகிசுக்கப்பட்டது.

    மனக்கசப்பு

    மனக்கசப்பு

    அதன்படி ஒரு சில தகவல்களும் கசிந்துள்ளன. முதல்வருடன் ஏற்பட்ட மனக்கசப்புதான் ரோகிணி மாற்றம் என்கிறார்கள். முதல்வரின் சொந்த மாவட்டத்தில் அதிமுக எப்படியும் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படுதோல்வி அடையும் நிலை ஏற்பட்டது. சொந்த தொகுதியில் தேர்தல் தோல்வி ஏன் என்பது குறித்து முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    லிஸ்ட் போட்டு புகார்

    லிஸ்ட் போட்டு புகார்

    அதில், "தன்னை பிரபலப்படுத்தி கொள்ளும் அளவுக்கு தமிழக அரசின் திட்டங்களை சரியாக கலெக்டர் கொண்டு போய் சேர்க்கவில்லை. இந்த மாவட்டத்தில் வட மாநிலத்தவர்கள் சிலர் தரும் கோரிக்கைகளை செய்து தந்துவிடுவார். ஆனால் கட்சி நிர்வாகிகள் ஏதாவது பரிந்துரை செய்தாலும் அதை காதில் போட்டுக் கொள்வதில்லை. மத்திய அரசின் திட்டங்களுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார்" என்று லிஸ்ட் போட்டு புகார் சொல்லி உள்ளனர்.

    கொடி கம்பங்கள்

    கொடி கம்பங்கள்

    இதை தவிர மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்துக்கு நிதின் கட்கரி சேலம் வந்தபோது கோட்டை மைதானத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு வரை அதிமுக கொடிக் கம்பங்கள் கட்டப்பட்டிருந்ததாம். இது சம்பந்தமாக திமுக தரப்பில் புகார் சொல்லவும், தேர்தல் அதிகாரியான ரோகிணி, அந்த கொடி கம்பங்களை அகற்ற சொல்லி விட்டாராம். இது முதல்வருக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறுகிறார்கள்.

    எம்பி பார்த்திபன்

    எம்பி பார்த்திபன்

    இன்னொரு காரணமும் கூறப்படுகிறது, சேலம் 5 ரோடு பகுதியில் பறக்கும் மேம்பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொண்டு பாலத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் எதிர்பாராதவகையில், சேலம் எம்பி பார்த்திபன், சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனும் கலந்து கொண்டுள்ளனர்.

    டம்மி போஸ்டிங்

    டம்மி போஸ்டிங்

    இன்னும் எம்பியாக பதவியே எடுக்காதபோது, பார்த்திபனுக்கு யார் அழைப்பு விடுத்தது என்று முதல்வர் கோபமடைந்தாராம். இதெல்லாம்தான் ரோகிணியை ஒரு டம்மி போஸ்ட்டுக்கு மாற்ற காரணங்களாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

    English summary
    Sources say that, the reason for Salem District Collector Rohini's transfer is said to be his resentment with CM Edapadi Palanisamy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X