கணவரை இழந்த பெண்கள் டார்கெட்.. வீடியோவை காட்டி மிரட்டி,மிரட்டியே நாசமாக்கிய கும்பல்.. அதிரும் சேலம்
சேலம்: சேலத்தில், கணவனை இழந்தப் பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற கும்பல் சிக்கியது. இதில் கொடுமை என்னவென்றால், கைதான நபரில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொடுமையிலும் கொடுமையான இந்த சம்பவம் குறித்து நீங்களே பாருங்கள். சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (52). இவரது மகன் லோகநாதன்(35). லோகநாதனின் மனைவி ரூபா(30).
இவர்கள் மூவரும் பணம் சம்பாதிப்பதற்காக பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதற்காக இவர்கள் தேர்ந்தெடுத்த நபர்கள், கணவரை இழந்த இளம் பெண்கள்.

ஆபாச படம்
லோகநாதனின் தங்கை உறவு முறை கொண்ட கணவரை இழந்த ஒரு பெண் முதலில் இவர்கள் வலையில் சிக்கியுள்ளார். விபச்சாரம் செய்ய கூப்பிட்டால் வரமாட்டார்கள் என்பதால், மாற்று வழியை கண்டுபிடித்துள்ளனர். அதாவது அந்த பெண்களை எப்படியாவது ஆபாசமாக படம் எடுத்துவிடுவது. பிறகு சமூக வலைத்தளத்தில் வெளியிடுவோம் என மிரட்டி, விபச்சாரத்திற்கு சம்மதிக்க வைப்பது.

பல பெண்கள் நாசம்
இப்படித்தான், லோகநாதனின் தங்கை உறவு முறை கொண்ட பெண்ணையும், மற்றும் அவரது தோழியையும் மிரட்டி ஆபாசப்படம் எடுத்து உள்ளனர். அதேபோல் லோகநாதனின் நண்பர்களான தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த பிரதீப் (30) மற்றும் சிவா (36) ஆகியோரும் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கணவரை இழந்த பெண்ணை மிரட்டி ஆபாசமாக படம் எடுத்துள்ளனர். பின்னர் அந்த படங்களை காட்டி பெண்களை மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றுள்ளனர்.

போலீசில் புகார்
சில பெண்களை பாலியல் வண்கொடுமையும் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வீடியோக்களை லீக் செய்யாமல் இருக்க, இதுகுறித்து போலீசுக்கு சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளனர். ஆனால், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, பாதிக்கப்பட்ட சில பெண்கள், இதுகுறித்து டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஆபாச படங்கள்
இதனையடுத்து தக்க ஆதாரங்களுடன் லோகநாதன், பிரதீப், சிவா ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் மீது ஆபாசப்படம் எடுத்தது, பாலியல் வன்கொடுமை செய்தது, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள லோகநாதனின் மனைவி ரூபா மற்றும் அவரது தந்தை ரகுமான் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களின் செல்போனில் இருந்து ஆபாச படங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் நிலையம் சுத்திகரிப்பு
இதனிடையே, கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, விசாரணை செய்த காவலர்கள் உட்பட 25 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கைது செய்ய கஷ்டப்பட்டதைவிட, கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள போலீசார், சிரமப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது கொடுமைதான்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications