சேலம் விமான நிலைய விரிவாக்கம் எப்போது? 210 ஏக்கர் நிலம் ஒப்படைப்பதில் என்ன சிக்கல்?

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக அரசு 210 ஏக்கர் நிலம் ஒதுக்க உத்தரவிட்டும், அந்த நிலம் இன்னும் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் விரிவாக்கப் பணிகள் தாமதமாகி வருகின்றன. நிலத்தை விரைந்து ஒப்படைத்து, விமான நிலையத்தை முழுமையாகப் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலத்தைச் சேர்ந்த தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்...!!

சேலம் விமான நிலையத்தை சுமார் ரூ.365 கோடி செலவில் விரிவுபடுத்த ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக கூடுதல் நிலம் கையகப்படுத்தவும், மேலும் 2 விமானங்களை நிறுத்தும் வசதியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டது.. பயணிகள் வந்து செல்லும் பிரதான கட்டிடத்தை விரிவுபடுத்துவது, கார் நிறுத்துமிடத்தில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவது போன்ற பணிகளும் இந்தத் திட்டத்தில் இடம்பெற்றிருந்தன.

salem

சேலத்தில் புதிய விமான சேவை

விரிவாக்கப் பணிகள் முடிந்தால் சேலத்திலிருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களுக்கு நேரடி விமான சேவை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இரவு நேரத்திலும் விமானங்கள் தரையிறங்கும் வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் திட்டமிடப்பட்டது. இப்போது சேலத்தில் இருந்து சென்னை, கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

விரிவாக்கத்தில் சிக்கல்

சேலம் மாவட்டம் கமலாபுரத்தில் அமைந்துள்ள விமான நிலையம் 136 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்குள்ள ஓடுதளம் 1,800 மீட்டர் நீளம் மட்டுமே கொண்டது. இதனால் சிறிய ரக ஏடிஆர் மற்றும் பாம்பார்டியர் விமானங்கள் மட்டுமே இங்கு தரையிறங்க முடிகிறது. பெரிய விமானங்களையும் இயக்கும் வகையில் விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இதற்காக 2018 மற்றும் 2022ம் ஆண்டுகளில் விரிவாக்கத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தத் திட்டங்கள் தாமதமாகின.

இந்த நிலையில், முதல் கட்டமாக 206.17 ஏக்கர் நிலத்தை ரூ.364.85 கோடியில் கையகப்படுத்த 2025 நவம்பர் 17ம் தேதி தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. ஆனாலும், நில உரிமையாளர்கள் தொடர்பான பிரச்சினைகள் நீடிப்பதால், அந்த நிலம் இன்னும் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்படவில்லை.

தொழில் துறையினர் கோரிக்கை

சேலம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால், கூடுதல் விமானங்களை இயக்க முடியும். முக்கிய நகரங்களுக்கும் மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்க முடியும். இதனால் சேலத்தின் தொழில் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்று தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இந்திய தொழில் கூட்டமைப்பின் சேலம் மண்டல தலைவர் பூபாலன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் கூடுதல் விமானங்களை இயக்கவும், முக்கிய வர்த்தக நகரங்களுக்கான இணைப்பை மீண்டும் பெறவும் முடியும். 2035ம் ஆண்டிற்குள் சேலத்தை உலகத்தரம் வாய்ந்த தொழிற்துறை மையமாக மாற்ற இந்த திட்டம் மிகவும் அவசியமானது" என்றார்.

ரூ.50 கோடியில் கட்டடப் பணி

சேலம் விமான நிலையத்தில் பயணிகள் வந்து செல்லும் பிரதான கட்டிடத்தை விரிவுபடுத்த ரூ.50 கோடி மதிப்பிலான பணிகள் தொடங்கியுள்ளதாக விமான நிலைய இயக்குநர் நவ்ஷாத் தெரிவித்துள்ளார்.

விமான நிலைய விரிவாக்கத்துக்காக நிலம் ஒதுக்க உத்தரவிடப்பட்டும், அது இன்னும் ஒப்படைக்கப்படாதது குறித்து விமான நிலைய இயக்குநர் நவ்ஷாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, "விமான நிலைய விரிவாக்கத்திற்கு முதலில் 170 ஏக்கர் நிலம் கோரப்பட்ட நிலையில், அரசு சுமார் 210 ஏக்கர் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டும் இதுவரை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் நிலம் ஒப்படைக்கப்படவில்லை. ஹைதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய வழித்தடங்களில் தனியார் நிறுவனங்கள் மீண்டும் விமான சேவையை தொடங்க வாய்ப்புள்ளது" என்றார்.

எனவே, நிலத்தை விரைந்து ஒப்படைத்து விமான நிலைய விரிவாக்கப் பணிகளை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சேலம் தொழில் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.,,!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+