கட்சி பெயரைச் சொல்லி மிரட்டி.. 40 பெண்களை சீரழித்த.. மாஜி விசிக பிரமுகர் சேலம் மோகன்ராஜ் அதிரடி கைது
Recommended Video
சேலம்: ஆபாச வீடியோக்கள் எடுத்து.. மிரட்டி.. 40 பெண்களை நாசம் செய்த சேலம் ஆட்டோக்காரர் மோகன்ராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள செல்லியம்பாளையம் மதுரை வீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். 42 வயதான இவர் 2 ஆட்டோக்களை சொந்தமாக வைத்துள்ளார்.
இளம்பிள்ளை பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு பொது கழிப்பறை உள்ளது. இந்த பாத்ரூமூக்குள் ஒரு இளைஞரை ஹோமோசெக்ஸூக்கு மோகன்ராஜ் அழைத்ததாக புகார் வந்தது. இதையடுத்து, மோகன்ராஜை மகுடஞ்சாவடி போலீசார் கைது செய்தனர்.

பெண்
இதனிடையே, சோஷியல் மீடியாவில் கல்யாணம் ஆன பெண்ணை மோகன்ராஜ் மிரட்டி, தாக்கி, கட்டாயப்படுத்தி உல்லாசத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்றும் வெளியானது. இதனால் மோகன்ராஜ் செல்போனை பிடுங்கி பார்த்தபோது, 7 பெண்களை இப்படியே நாசம் செய்த வீடியோ இருந்ததை கண்டு அதிர்ந்தனர். அதன்பிறகுதான் விசாரணை தீவிரமானது.

விசிக
விசாரணையில் இவர், இளம்பிள்ளை விசிக சார்பில் இயங்கி வரும் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். ஆட்டோவில் ஏறும் பெண்களிடம் பேச்சு தந்து, செல்போன் நம்பரை தந்திரமாக வாங்கி வைத்து கொண்டு, பிறகு மிரட்டி தன் இச்சைக்கு பணிய வைத்துள்ளார். இப்படியே 40-க்கும் மேற்பட்ட பெண்களை மோகன்ராஜ் நாசம் செய்துள்ளார்.

நண்பர்கள்
கல்யாணம் ஆன பெண்கள் தவிர, பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவியும் இதில் அடங்குவர். தன்னிடம் சிக்கும் பெண்களை நண்பர்களுக்கும் விருந்தாக்கி உள்ளார் மோகன்ராஜ் ஒருசில பெண்கள் இவனுக்கு பயந்து ஊரைவிட்டே போய்விட்டார்கள் என்பதும் போலீசார் அந்த பகுதியில் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமில்லை, கட்சி பெயரை சொல்லிதான் பல பெண்களை மிரட்டி இருக்கிறார் என்றும் தெரியவந்தது.

பிளவு
ஆனால், மோகன்ராஜ் ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்களை சாதி ரீதியில் பிளவுபடுத்தியதால் அவரை கடந்த ஜுன் மாதம் 9-ம் தேதி நீக்கிவிட்டோம் என்று கட்சி சார்பாக சொல்லப்படுகிறது. எனினும் யாராக இருந்தாலும், தவறு செய்தவர்களை தண்டிப்பது அவசியம் என்று விசிக தெரிவித்துள்ளது. இப்போது கைது செய்யப்பட்டுள்ள மோகன்ராஜிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications