ஆபாச வீடியோக்கள்.. நிறைய பெண்களை.. மிரட்டியிருக்கேன்.. சீரழிச்சிருக்கேன்.. அதிர வைத்த ஆட்டோ மோகன்!
சேலம் ஆட்டோ மோகன்ராஜ் பாலியல் வழக்கு விசாரணை தீவிரமாகிறது
சேலம்: ஹோமோசெக்ஸ் புகாரில் கைதாகி சிறையில் உள்ள ஆட்டோக்கார மோகன்ராஜின் செல்போனில், ஏகப்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதை கண்டு சேலம் போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். "இந்த மாதிரி நிறைய பெண்களை மிரட்டி, சீரழித்து இருக்கிறேன்" என்று போலீசில் மோகன்ராஜ் வாக்குமூலமும் தந்துள்ளார்.
கடந்த சில தினங்களாகவே சேலம் மாவட்டம் காக்காபாளையம் பகுதி ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் குறித்த செய்திகள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
காக்காபாளையம் பஸ் அருகே உள்ள ஒரு பொது கழிப்பறைக்குள் வந்த முருகேசன் என்பவரை ஓரினச் சேர்க்கைக்கு மோகன்ராஜ் அழைத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தபிறகுதான், பல விவகாரங்கள் வெளியே வந்தன.

பகிர்வு
அவரிடம் இருந்த செல்போனில், மோகன்ராஜ் பெண் ஒருவரை மிரட்டி, உல்லாசம் அனுபவிப்பதும், அந்த வீடியோவை, மோகன்ராஜே, சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் என்றும் சொல்லப்பட்டது. இதைதவிர, மோகன்ராஜ் 7 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவை அந்த செல்போனிலேயே மோகன்ராஜ் பதிவுசெய்து வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆபாச வீடியோ
ஆனால், அந்த 7 பேரில் ஒரு பெண்கூட இது சம்பந்தமான புகார் எதுவும் தரவில்லை என்று சொல்லப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ரூ. 2 ஆயிரம் ரூபாய் கடனுக்காக மோகன்ராஜ் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கமிஷனரை சந்தித்து, புகார் தந்தார். இதன்பேரில், ஆபாச படம் எடுத்து தாக்குதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறையில் இருந்த அவரை மீண்டும் கைது செய்தனர்.

கொடுமை
இதனிடையே பாதிக்கப்பட்ட அந்த பெண் கடந்த 10-ந் தேதி கோர்ட்டில் ரகசிய வாக்கு மூலம் அளித்தார். அந்த நேரத்தில் கோர்ட்டில் இருந்த எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தனக்கு நடந்த கொடுமை குறித்து கண்ணீர் மல்க வாக்கு மூலம் தந்தார்.

விசாரணை
பின்னர் மோகன்ராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக காவல்துறை தரப்பில் சேலம் மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படவும், 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட் அனுமதி அளித்தது. அதன்படி தற்போது விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது. எத்தனை பெண்களை நாசம் செய்தார். ஆபாச வீடியோக்கள் எத்தனை என்பது குறித்தெல்லாம் விசாரணை நடக்கிறது.

நிறைய பெண்கள்
இன்னொரு பக்கம் மோகன்ராஜின் செல்போனும் ஆய்வு செய்யப்பட்டது. அதில் மேலும் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீடியோக்கள் குறித்து மோகன்ராஜிடம் கேட்கப்பட்டதற்கு, அவர்களை மிரட்டி பணிய வைத்து சீரழித்ததை ஒப்புக் கொண்டு இருக்கிறார். இன்னும் விசாரணை நாட்கள் 6 நாட்கள் உள்ளது.. இதில் எப்படியும் போலீசார் பல திடுக் விஷயங்களை மோகன்ராஜிடம் இருந்து கறந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications