Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Salem Accident: சேலம் அரியானூர் அருகே தாறுமாறாக ஓடிய அரசு பஸ்! 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் அரியானூர் அருகே தாறுமாறாக சென்ற அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிர்புறம் சென்ற வாகனங்கள் மீது மோதிய விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

சேலம் அருகே அரியானூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் இருக்கிறது. அதற்கு எதிரேதான் இந்த விபத்து நடந்தது. அதாவது எதிர்புறமாக ஒரு அரசு பேருந்து வந்துக் கொண்டிருந்தது.

salem accident

அப்போது அந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசை நோக்கி தாறுமாறாக ஓடியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர், இரு குழந்தைகள் உள்பட 7 பேர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.

இறந்தவர்கள் 11 மாத குழந்தை ஜீவிகா, 5 வயது குழந்தை நித்திஷ்கா, இருசாயி, அமுதா, முருகன், செல்வராஜ், மணிகண்டன் ஆகிய 7 பேர் பலியாகிவிட்டனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், சேலம் - உத்தமசோழபுரம் பகுதியில், கோயம்புத்தூரிலிருந்து சேலம் நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோர தடுப்பை உடைத்து எதிர்புறம் சென்ற வாகனங்கள் மீது அதிவேகமாக மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் என்ற செய்திகள் வருகின்றன, வருத்தத்திற்குரிய இத்தகவல் அறிந்து மிகுந்த துயருற்றேன்.

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி உள்ள நிலையில், இந்த ஆட்சியில் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட‌வில்லை என்பதையே இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அஇஅதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர்‌ விரைவில் பூரண நலம்பெற்று இல்லம் திரும்ப இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் கண்டனம்

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், சேலத்தை அடுத்த உத்தமசோழபுரத்தில் தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து சாலையில் வந்த வாகனங்கள் மீது மோதியதில் அவற்றில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்து உத்தமசோழபுரம் சூளைமேடு அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பைத் தாண்டிச் சென்று எதிர்த்திசையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர ஊர்தி மற்றும் வேன் மீது பயங்கர வேகத்தில் மோதியது. அதில் இரு சக்கர ஊர்தியில் பயணித்த இருவரும், வேனில் பயணித்த 11 மாத குழந்தை உள்ளிட்ட 5 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

பேருந்தில் பிரேக் பிடிக்காததும், ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் பேருந்து இல்லாததும் தான் விபத்துக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே ஆட்சியாளர்கள் கொள்ளையடிப்பதற்காக மட்டுமே அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பயன்படுத்தப்பட்டன. அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான 90% பேருந்துகள் அவற்றின் ஆயுள்காலத்தைக் கடந்து இயக்குவதற்கு தகுதியற்ற நிலையில் இருப்பதாக நான் தொடர்து குற்றஞ்சாட்டி வந்தேன். இந்த விபத்தின் மூலம் எனது குற்றச்சாட்டு உறுதியாகியிருக்கிறது.

தகுதியற்ற பேருந்துகளை இயக்கிய திமுக அரசு தான் இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த விபத்தில் படுகாயமடைந்த வேனின் ஓட்டுனர் மேகநாதன் உள்ளிட்ட அனைவருக்கும் தரமான மருத்துவம் வழங்கவும், அவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+