தாரமங்கலம் சின்னப்பொண்ணு.. மனைவிக்கு ஆபாச வீடியோவை காட்டிய கணவன்..அடுத்து நடந்த ட்விஸ்ட்.. சேலத்தில்
சேலம்: தாரமங்கலம் அருகே, மனைவிக்கு ஆபாச வீடியோவை அனுப்பி வைத்து தற்கொலைக்கு தூண்டிய கணவன், ஒன்றரை மாதத்திற்கு பின்பு காதலியுடன் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ளது துட்டம்பட்டி என்ற பகுதி.. இந்த பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர்.. 44 வயதாகிறது.. பெங்களூருவில் கல் உடைக்கும் தொழில் செய்பவர்..

குடும்பம்: அங்கேயே தங்கியிருப்பதால், தன்னுடைய குடும்பத்தினரையும் அங்கேயே அழைத்து சென்றுவிட்டார்.. மனைவி பெயர் சாந்தி.. 36 வயதாகிறது.. 2 மகன்கள் இருக்கிறார்கள்.. 2 பேருமே பள்ளியில் படித்து வருகிறார்கள்..
இந்நிலையில் ஜெய்சங்கருக்கு, சின்னப்பொண்ணு என்ற பெண்ணுடன் கள்ள உறவு இருந்து வந்துள்ளது.. இந்த பெண்ணுக்கு 43 வயதாகிறது.. ஜெய்சங்கரின் உறவுக்கார பெண்ணாம் இந்த சின்னப்பொண்ணு. இவர்களின் கள்ள உறவு, மனைவி சாந்திக்கு தெரிந்துவிட்டதால், கணவனை கண்டித்துள்ளார்..
கண்டிப்பு: கள்ளக்காதலை கைவிடுமாறும் ஜெய்சங்கரிடம் சொல்லி வந்துள்ளார். ஆனால், சாந்தியின் பேச்சை, ஜெய்சங்கர் கண்டுகொள்ளவேயில்லையாம். கள்ளக்காதலியை விட்டுவிடுமாறு தொடர்ந்து சாந்தி அட்வைஸ் செய்வது ஜெய்சங்கருக்கு எரிச்சலை தந்தது.. எனவே கடந்த மார்ச், கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோவை, சாந்திக்கு வாட்ஸ்அப்பில் ஜெய்சங்கர் அனுப்பி வைத்தாராம்.
அந்த வீடியோவை அனுப்பி வைத்ததுடன், "இங்கே பாரு.. இதுபோல், உன்னால் எனக்கு சந்தோஷம் தரமுடியாது" என்று மெசேஜ்ஜூம் அனுப்பி வைத்தாராம்.. இந்த வீடியோவை பார்த்து கதறி கதறி அழுத சாந்தி, உடனே தூக்கு போட்டு தற்கொலையும் செய்து கொண்டார்.
சின்னப்பொண்ணு: இதையடுத்து, தற்கொலைக்கு சாந்தியை தூண்டியதாக ஜெய்சங்கர், கள்ளக்காதலி சின்னப்பொண்ணு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், போலீசார் தங்களை தேடுகிறார்கள் என்று தெரிந்து, அதற்குள் இந்த கள்ள ஜோடி எஸ்கேப் ஆகிவிட்டது.. எனவே, இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.. ஆனாலும், போலீசின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, தப்பித்து கொண்டேயிருந்தது இந்த கள்ளஜோடி.
இந்நிலையில், தாரமங்கலம் அருகே பண்ணப்பட்டி பகுதியிலுள்ள சொந்தக்காரர் வீட்டில் அந்த ஜோடி பதுங்கியிருந்தததாம்.. இந்த தகவல் போலீசுக்கு தெரிந்ததையடுத்து, அந்த சொந்தக்காரர் வீட்டையே ரவுண்டு கட்டி விட்டனர்.. இருவரையும் அங்கேயே கைது செய்தனர்..
உறவு: இந்த சின்னப்பொண்ணுவுக்கு, ஏற்கனவே கல்யாணமாகிவிட்டதாம்.. 5 மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.. ஆனாலும், தன்னுடைய குடும்பத்தை பார்க்காமல் ஜெய்சங்கருடனேயே ஒட்டி உறவாடி வந்திருக்கிறார்.. அதுவும், இந்த ஒன்றரை மாதமாக தன்னுடைய குடும்பத்தை மொத்தமாகவே மறந்து, ஜெய்சங்கருடனேயே ஊர் ஊராக சுற்றி வந்திருக்கிறார் சின்னப்பொண்ணு.
இதில் ஹைலைட் என்னவென்றால், சின்னப்பொண்ணுவிடம் ஜெய்சங்கருக்கு அதிக பிரியம் எல்லாம் கிடையாதாம்.. ஏனென்றால், சின்னப்பொண்ணு போலவே, மேலும் 2 பெண்களுடனும் ஜெய்சங்கர் சாருக்கு தொடர்பிருக்கிறதாம்..!! பாவம் அந்தப்பெண் சாந்தி...!!












Click it and Unblock the Notifications