இது ஸ்பெஷல்.. ரொம்ப சந்தோஷமாக உணர்கிறேன்.. கலெக்டர் ரோகிணி கண்ணீர்!
சேலம் கலெக்டர் ரோகிணி விவசாயிகள் கூட்டத்தில் உரையாற்றினார்
Recommended Video
சேலம்: கடைசி கூட்டம் என்பதாலோ என்னவோ, கலெக்டர் ரோகிணிக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. விவசாயிகள் கூட்டத்தில் உருக்கமாக பேசி கண்ணீரோடு விடைபெற்றார்.
கடந்த 2017 ம் ஆண்டு சேலம் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக ரோகிணி பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் பங்கேற்ற முதல் கூட்டமே விவசாயிகள் குறைதீர் கூட்டம்தான்.
சேலத்தில் தொடர்ந்து 20 மாத காலம் பணியாற்றிய ரோகிணி விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி கல்லூரி குழந்தைகள் உள்பட அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்தார். சேலத்தில் இவர் மேற்கொண்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இவர் பிரபலமானார்.

பதிவுகள்
இந்நிலையில் நேற்று இரவு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உள்ளிட்டவர்களுக்கு பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ரோகிணி தான் எங்களுக்கு கலெக்டராக வர வேண்டும் என்று மாவட்ட மக்கள் இணையத்தில் பதிவுகளை போட ஆரம்பித்தனர்.

வருத்தம்
இந்நிலையில் இன்று சேலத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ரோகிணி கலந்து கொண்டு, விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது விவசாயிகள் பலர் ரோகிணியின் பணியிட மாறுதலுக்கு வருத்தம் தெரிவித்து உணர்ச்சிபூர்வமாக வாழ்த்தினர்.

சால்வை
கூட்ட முடிவில் விவசாயி ஒருவர் ரோகிணிக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை பெற்று கொண்டு பேசிய ரோகிணி, "எனக்கு இதுக்கு முன்னாடி எத்தனையோ சால்வைகள் அணிவித்திருக்கிறார்கள். ஆனால், இப்போது இந்த விவசாயி அணிவித்த சால்வையை ரொம்ப பெருமையா நினைக்கிறேன்.

கண்ணீர்
ஒரு கலெக்டராக மட்டுமின்றி ஒரு விவசாயியின் பெண்ணாகவும் விவசாயிகளின் பாராட்டை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று சொல்லும்போதே கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. சால்வையை கையில் இறுக்கி பிடித்து கண்ணீர் விட்டார் ரோகிணி. அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications