17 ஆண்டாக சேலம் பக்தர் அலைகழிப்பு.. திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ 45 லட்சம் அபராதம் விதித்த கோர்ட்
சேலம்: 17 ஆண்டுகளாக காத்திருந்தும் பக்தரை குறிப்பிட்ட சேவையின் கீழ் அனுமதிக்காததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ 45 அபராதம் அளித்து சேலம் நுகர்வோர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
சேலம் அழகாபுரம் மணிமேகலை தெருவில் வசித்து வருபவர் ராஜகோபால். இவரது மகன் ஹரிபாஸ்கர். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மேல் சாத்து வாஸ்திர சேவை என்ற தரிசனத்திற்கு பதிவு செய்திருந்தார்.
அதாவது இருவருக்கும் சேர்த்து ரூ 12,250 செலுத்தியிருந்நதார். அப்போது அவர்களுக்கு எஸ்.எல்.நம்பர் ஒதுக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதிக்கு தரிசனம் என ஒதுக்கப்பட்டது.

14 ஆண்டுகள்
அதாவது கிட்டதட்ட 14 ஆண்டுகள் கழித்து தரிசனம் என ஒதுக்கப்பட்டது. ஆனால் 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி மேல் சாத்து வாஸ்திர சேவை தரிசனம் செய்ய கொரோனா ஊரடங்கால் வேறு ஒரு தேதி அறிவிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்தது.

மேல் சாத்து வாஸ்திர சேவை
பின்னர் மேல்சாத்து வாஸ்திர சேவைக்கு வாய்ப்பில்லாததால் பிரேக் தரிசனம் செய்ய தரிசனம் தேதி தருவோம் என தேவஸ்தானம் கூறியிருந்தது. ஆனால் 17 ஆண்டுகளாகியும் அந்த பிரேக் தரிசனத்திற்கு கூட தேவஸ்தானம் ஏற்பாடு செய்து தரவில்லை என தெரிகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம்
இதையடுத்து தேவஸ்தானம் மீது சேலம் நுகர்வோர் குறை தீர் நீதிமன்றததில் ஹரி பாஸ்கர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரத்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி, " திருப்பதி தேவஸ்தானம் இன்னும் ஓராண்டில் மனுதாரருக்கு மேல்சாத்து வாஸ்திர சேவை என்ற தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

ரூ 45 லட்சம் இழப்பீடு
இல்லாவிட்டால் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக ரூ 45 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த தரிசனத்திற்காக ஹரிபாஸ்கர் செலுத்திய ரூ 12.250 ரூபாயையும் உத்தரவு பிறப்பித்த இரு மாதங்களில் ஹரிபாஸ்கருக்கு செலுத்த வேண்டும். இல்லாவிட்டல் 6 சதவீதம் வட்டியுடன் சேர்த்து தர வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து திருப்பதி தேவஸ்தானம் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications